பிரபல சின்னத்திரை நடிகை ரக்சிதா மகாலட்சுமி கையில் குழந்தையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் ரக்சிதா. இவருக்கு சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தி தந்தது. தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் ரக்சிதாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்களுடைய கவனத்தை பெற்றனர். பிரபலம் அடைந்ததால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கும் பலரது ஆதரவை பெற்றார்.
கணவரை ரக்சிதா பிரிந்துள்ள நிலையில் அதுபற்றி அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எதுவும் குறிப்பிடவில்லை. இனிமேல் தனது வாழ்க்கையும், அம்மா மற்றும் தான் தத்தெடுக்கப் போகும் குழந்தை மட்டுமே என்று கூறி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான குழந்தையுடன் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த குழந்தையின் பின்னணி அவர் பிக்பாஸில் கூறியதுதானாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரக்சிதாவுக்கும், கியூட்டான குழந்தைக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த குழந்தை பற்றிய மற்ற விபரங்களை ரக்சிதா விரைவில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.