நடிகைஷாம்னா காசிம் பூர்ணா ( Shamna Kasim (aka) Poorna ) தமிழ் சினிமாவில் நன்கு அறிமுகமான ஒரு நடிகை. அவர் நடித்த பல படங்களில், தனது சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், ஜன்னல் ஓரம், தகராறு, கொடிவீரன், சவரக்கத்தி, அடங்க மறு, காப்பான், லாக்கப். தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் சில படங்களில், வில்லி கேரக்டரிலும் பூர்ணா, நல்ல நடிப்பை தந்திருக்கிறார்.
பூர்ணா கேரளா மாநிலம், கண்ணூரைச் சேர்ந்தவர். மீனவ குடும்பத்தில், பிறந்த ஐந்து பேரில் ஒருவர். பள்ளி படிப்பை கேரளாவில் முடித்த பூர்ணா மேடை நாடகங்களில் நடித்தவர். நடனமாடியவர். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஷாம்னா காசிம். சினிமாவுக்காக, பூர்ணா என பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
தெலுங்கு சினிமாவில், சில படங்களில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெயர் பெற்றார். தமிழில், கொடிவீரன் என்ற படத்தில் நடித்த போது, படத்தில் அந்த கேரக்டருக்காக, தன் தலையை மொட்டையடித்துக்கொண்டார். அந்த அளவுக்கு, நடிப்புக்காக தன் அழகை இழக்க தயங்காதவர். ஆனால், கொடிவீரன் படத்தில், இவரது வில்லி கேரக்டர் பெரிய வரவேற்பை, ரசிகர்களிடம் பெறவில்லை. அதே போல், தகராறு படத்திலும் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார்.
இப்போது, பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில், தனது வீடியோக்கள், புகைப்படங்களை பூர்ணா அப்டேட் செய்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நைட்டி உடன், கையில் உள்ள பூங்கொத்தை பின்னால் வைத்து மறைத்தபடி, ஒரு ஹாலுக்குள் செல்கிறார். அங்கே நின்றிருக்கும் தனது கணவருக்கு பூங்கொத்தை தரும் பூர்ணா, அவரை கட்டியணைத்து, கன்னத்தில் மீண்டும் மீண்டும் முத்தம் கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவிக்கிறார்.
மனைவி பூர்ணாவின் முத்த மழையில் திகைத்து நிற்கும் அவரை, கட்டியணைத்து மீண்டும் முத்தம் கொடுக்கிறார் பூர்ணா. இந்த ரொமான்ஸ் காட்சி வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஹாலில் வைத்து, இப்படி ரொமான்ஸ் செய்து, சூட்டை கிளப்புகிறாரே பூர்ணா என, நெட்டிசன்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.