சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய சிவகார்த்திகேயன் அப்படியே விஜய் டிவியில் படிப்படியாக தன்னை தொகுப்பாளராக வளர்த்துக் கொண்டார்.
தனுஷின் 3 படத்தில் காமெடியனாக சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் மெரினா, எதிர்நீச்சல் என சினிமாவில் சட்டென ஹீரோவாக மாறினார்.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி: இஷ்டப்பட்டு உழைத்தால் கஷ்டப்படாமல் வாழலாம் என்பதற்கு உதாரணமாக தன்னால் சினிமாவில் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் ஒவ்வொரு படியாக உயர்ந்த சிவகார்த்திகேயன், இன்று டாப் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
கோலிவுட்டின் எதிர்காலமே சிவகார்த்திகேயன் தான் என்கிற அளவுக்கு தனது படங்கள் மூலம் மக்களை மகிழ்விப்பது மட்டுமின்றி தயாரிப்பாளர்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் லாபத்தையும் வாரி வழங்கி வருகிறார்.
மாவீரன் அவதாரம்: வரும் ஜூலை 14ம் தேதி மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டாக்டர், டான் என பேக் டு பேக் 100 கோடி ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் சறுக்கிய நிலையில், மாவீரன் அவதாரம் எடுத்து கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
மிஷ்கின், அதிதி சங்கர், யோகி பாபு என ஏகப்பட்ட ஸ்டார் காஸ்டிங் அந்த படத்தில் உள்ள நிலையில் படம் பெரிய வெற்றியை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு அயலான்: மாவீரன் மட்டுமின்றி இந்த ஆண்டு இன்னொரு ட்ரீட்டையும் தனது ரசிகர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ஏலியன் படமான அயலான் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது.
சினிமா வாழ்க்கையை போலவே குடும்ப வாழ்க்கையையும் ரொம்பவே கவனமாக மேனேஜ் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் வீட்டில் தனது குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சிவகார்த்திகேயன் மகன் வளர்ந்துட்டாரே: சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா கனா படத்தில் "வாயாடி பெத்தப் புள்ள" பாடலையே அவரது அப்பாவுடன் இணைந்து பாடி அசத்தினார்.
அடுத்ததாக தனது அப்பாவே தனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறார் என குகன் தாஸ் என பெயரிட்டு தனது மகனை வளர்த்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் நடந்து செல்லும் அழகை ரசித்தப்படி எடுத்த போட்டோவை வெளியிட்டு, "நீ நடந்தால் நடையழகு" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
பிரபலங்கள் கமெண்ட்ஸ்: சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்த பிக் பாஸ் அர்ச்சனா, கனா படத்தில் நடித்த தர்ஷன், ஆர்ஜே விஜய், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பிரபலங்கள் சிவகார்த்திகேயன் மகன் அப்பாவை போல செம ஸ்டைலாக நடந்து செல்லும் போட்டோவை பாராட்டி கமெண்ட்டுகளை போட்டுள்ளனர்.