கோவை அவிநாசி சாலை விமானநிலையம் அருகே பிராட்வே சினிமாஸ் கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஐமேக்ஸ் திரையரங்கம் அதில் இடம்பெற்றுள்ளது.
பிராட்வே சினிமாஸ்
மொத்தம் 9 ஸ்க்ரீன்கள், ஹோட்டல்கள், சில்லறை விற்பனைக் கடைகள், கேமிங், ஃபேஷன் உடை நிறுவனங்களும் அந்த வளாகத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதுகுறித்து பிராட்வே சினிமாஸ் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார் கூறுகையில், "வெள்ளித்திரை அனுபவத்தை அடுத்தகட்டத்துக்கு உயர்த்தும் நோக்கிலும், பொழுதுபோக்குக்குச் சிறந்த இடத்தை வழங்கும் தொலைநோக்கு பார்வையுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஐமேக்ஸ் பிராட்வே
ஐமேக்ஸ் லேசர், EPIQ பிரீமியம் மற்றும் கோல்ட் ஸ்கிரீன் திரைகள் மூலம் சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும். முக்கியமாக ஐமேக்ஸ் திரையில் அற்புதமான லேசர் புரொஜக்சன், 12 சேனல் கொண்ட ஒலி அமைப்பு, துல்லியமான கிரிஸ்டல் க்ளியர் படங்கள் புதிய அனுபவத்தை வழங்கும்.
அனைத்து திரைகளும் ஸ்டேடியம் போன்ற இருக்கைகளுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும். கோல்ட் ஸ்க்ரீனில் சாய்வு இருக்கைகளுடன் ஆடம்பர வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்தும் இறுதி செய்யப்படும்.
பிராட்வே சினிமாஸ்
பொழுதுபோக்கு, ஷாப்பிங், உணவு என அனைத்துக்கும் சரியான இடமாக இது இருக்கும்" என்றார். இந்த வாரம் வெளியாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன் 2' மற்றும் அடுத்த வாரம் வெளியாகும் 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி - வால்யூம் 3' உள்ளிட்ட படங்கள் இங்குத் திரையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.