ஜெயிலர் படம் சர்வதேச அளவில் தொடர்ந்து வசூல்சாதனை படைத்து வருகிறார். படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி, இமயமலையில் தற்போது தனது ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அடுத்த மாதத்தில் துவங்கும் ரஜினியின் தலைவர்170 பட சூட்டிங்: நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் அவர் சன் பிக்சர்சுடன் இணைந்துள்ள படம் ஜெயிலர். கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் இந்தப் படம் திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது. தற்போது சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் 400 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ள ஜெயிலர், விரைவில் 500 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்தவுடன் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ரஜினியின் சூட்டிங் மும்பை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி தற்போது இமயமலையில் தன்னுடைய ஆன்மீக பயணத்தை மேற்கொண்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் பயணத்தை அவர் தொடர்ந்துள்ளார். இடையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இமயமலை பயணத்தை மேற்கொள்ளவில்லை. ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே அவர் இமயமலை புறப்பட்டு சென்றார். விரைவில் அவர் சென்னை திரும்பவுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் டிஜே ஞானவேல் டைரக்ஷனில் தலைவர் 170 படத்தில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் அனிருத்தே இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க பிரபல தெலுங்குப்பட நடிகர் சர்வானந்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இந்த ரோலில் நடிகர் நானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் முக்கியமான கேரக்டரான இதில் தவிர்க்க முடியாத காரணங்களால் நானி நடிக்க முடியவில்லை. இதையடுத்தே தற்போது சர்வானந்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகவுள்ளதாகவும் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.