நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் பாலாஜி கே குமார் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் கொலை இன்வேஸ்டிகேஷன் திரில்லர் கதை அம்சத்துடன் உருவாகி இருக்கக்கூடிய இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்று இருந்தது.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் என அனைத்துமே ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானர் கதை என்றாலே அதற்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கொலை படத்தின் கதை
மிகவும் பிரபலமான மாடலாக இருக்கும் லைலா என்ற கதாபாத்திரம் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இந்த வழக்கை காவல்துறை அதிகாரியாக வரும் நடிகை ரித்திகா சிங்கிடம் விசாரணைக்கு செல்கிறது. ஒரு வாரத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என மேலதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்படுகிறார் நடிகை ரித்திகா சிங்.
இதனால், என்ன செய்வது என தெரியாமல் விழிப்புதுங்கி நிற்கும் நடிகர் ரித்திகா சிங் நடிகர் விஜய் ஆண்டனியின் உதவியை நாடுகிறார். முதலில் இந்த வழக்கை நான் எடுத்துக் கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறும் விஜய் ஆண்டனி அதன் பிறகு எதேர்ச்சையாக நடக்கும் சில சம்பவங்கள் காரணமாக இந்த வழக்கை நிச்சயமாக நாம் தான் முடிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்.
அதனுடன் நடிகர் ரித்திகா சிங்-கும் இணைந்து கொள்கிறார். விஜய் ஆண்டனியின் விசாரணையில் யார் யாரெல்லாம் சிக்கினார்கள். கொலையாளியை கண்டுபிடித்தாரா விஜய் ஆண்டனி..? எதற்காக லைலா கொலை செய்யப்பட்டார் என்பதுதான் படத்தின் கதை.
கொலை திரைவிமர்சனம்
கதாநாயகனாக நடித்த உங்களுடைய நடிகர் விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்தில் தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டியிருக்கிறார் என்று கூறலாம்.
ஆனால் அவருடைய நடிப்பு படத்திற்கு பெரிதாக வலு சேர்த்ததாக தெரியவில்லை. நடிகை ரித்திகா சிங்கும் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் படத்தின் ஓட்டத்திற்கும் அவருடைய நடிப்பிற்கும் பொருந்தி வரவில்லை.
அறிமுக நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி நடிப்பு ரசிக்கும் விதமாக இருக்கிறது. நடிகை ராதிகா சரத்குமார் இந்த படத்தில் எதற்காக நடிக்க ஒப்புக்கொண்டார் என தெரியவில்லை.
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அனைவரையும் தாண்டி தன்னுடைய நடிப்பு திறமையால் ஜொலிக்கும் நடிகர் ராதிகாவுக்கு இந்த திரைப்படத்தில் ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்படவில்லை.
நடிகர் முரளி சர்மா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி படம் முடிந்து வரும் பொழுது மனதில் எந்த கதாபாத்திரமும் நிற்கவில்லை என்பது தான் உண்மை.
இயக்குனர் பாலாஜி கே குமார் எடுத்துக் கொண்ட கதை களம் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால், அதனை திரைக்கதையாக கொடுத்த விதம் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.
மிகவும் மெதுவாக நகரக்கூடிய திரைக்கதை சலிப்பை ஏற்படுத்துகிறது. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானலில் வரக்கூடிய படங்கள் எந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பது பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
ஆனால் இந்த திரைப்படம் மிகவும் மெதுவாக நகர்கிறது. அடுத்த என்ன நடக்கப் போகிறது என்பதை பார்வையாளர்கள் எளிதில் யூகித்து விடுகிறார்கள். இதுவே படத்தின் மிகப்பெரிய குறை என்று கூறலாம்.
சில ரசிகர்கள் இந்த படம் ஒருமுறை பார்க்கலாம் என கூறினாலும் வெகுஜனா மக்கள் இந்த படத்தை எப்படி பார்ப்பார்கள் என்ற கேள்விக்குறி இருக்கிறது.
நடிகர்களின் நடிப்பு படத்தின் ஓட்டம் திரைக்கதை இயக்கம் படத்தின் கதைக்குள் ரசிகர்களால் தங்களை இணைத்துக் கொள்ள முடியாத நிலை என படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன.
படத்திற்காக இவர்கள் அமைந்துள்ள செட் அருமையாக இருக்கிறது. பின்னணி இசை தூள் கிளப்புகிறது. எடிட்டிங் இன்னுமே நன்றாக இருந்திருக்கலாம். திரைக்கதை. எழிதில் யூகிக்க கூடிய காட்சிகள். நடிகர் நடிகைகளின் நடிப்பு என ரசிகர்களுக்கு இந்த கொலை ஏமாற்றமாக அமைந்திருகிறது.