வெங்கட் பிரபுவுடன் இணையும் விஜய்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

post-img

இதை தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா நடிக்க இருக்கிறார். மேலும் தமன்னா, பிரியா பவானி சங்கர், கிருத்தி செட்டி உள்ளிட்டவர்களில் யாரேனும் ஒருவர் கதாநாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

இப்படம் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படத்தை போலவே அரசியல் கதைக்களத்தில் உருவாகலாம் என்றும் இதற்கு CSK என்ற தலைப்பு வைக்க வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

 

மேலும் சமீப காலமாக இந்த படம் குறித்த அப்டேட்டுகள் பரவலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்த படத்தை சர்வதேச படமாக உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி பட பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Post