சன் டிவி குடும்ப விருதுகளில் சைத்ராவிற்கு மனம் கவர்ந்த நாயகி என்கிற விருதினை நடிகர் ஆர்யா கொடுத்திருக்கிறார்.
கைகளில் விருது வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடிய சைத்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு நன்றி கூறி நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.
சன் டிவியில் டி ஆர் பி யில் முன்னணியில் இருக்கும் கயல் சீரியலின் கதாநாயகி சைத்ரா விருது வாங்கிய மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி கூறி தன்னுடைய கியூட்டான எக்ஸ்பிரஷன் உள்ள வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிகின்றார்கள்.
சன் டிவி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றனர். அதுவும் பிரேம் டைம் சீரியல் நடிகைகளுக்கு மவுசு அதிகமாகத்தான் இருக்கிறது. அந்த மாதிரி தான் கயல் சீரியல் சைத்ராவுக்கு ரசிகர்கள் கூட்டம் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. அதனால் அவருடைய பெயரில் அதிகமான பேன்ஸ் பேஜிகளும் அலைமோதுகிறது.
யார்ரா இந்த பொண்ணு இந்த மாதிரி ஒரு பொண்ணு நம்ம வீட்டுல இல்லையேன்னு பல பேர் எப்போதும் கயலை பார்த்து ஃபீல் பண்ணி கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு முன்பு கயல் சைத்ரா யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக மிரட்டி கொண்டிருக்கும்போது பலர் இவரை திட்டி தீர்த்தாலும் இப்போது கதாநாயகி ஆக தன்னுடைய முகத்தில் டெரராக வைத்துக் கொண்டு இவர் செய்யும் ஹீரோயிசத்தை பலர் புகழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சைத்ரா சின்னத்திரையில் அறிமுகமானது என்னவோ கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் தான் ஆனால் அந்த சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு பிறகு இவர் வந்ததால் வந்த வேகத்திலேயே அந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது பெரிய அளவில் சைத்ராவுக்கு முதல் சீரியல் பிரபலம் கொடுக்கவில்லை என்றாலும் அவருக்கு பிடித்த மாதிரியே வில்லியாக யாரடி நீ மோகினி சீரியலில் பலருடைய திட்டுகளை வாங்கி பிரபலம் ஆகி விட்டார்.
ஒரு சீரியலில் வில்லியாக நடித்ததால் இனி தொடர்ந்து இவர் இப்படித்தான் இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களின் சிந்தனை தவறு என்று சொல்வது போல இவர் கயல் சீரியலில் கதாநாயகியாக தியாக சுடர் கேரக்டரில் பலருடைய மனதை கவர்ந்து கொண்டிருக்கிறார். அதனாலயே இப்போது சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் இவருக்கு விருதுகள் கிடைத்து இருக்கிறது.
அதிகமான ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை என்ற கேட்டகிரியில் சைத்ராவிற்கு அவார்டு கிடைக்க அதை நடிகர் ஆரியா தன்னுடைய கையால் கொடுக்க அந்த அவார்டை வாங்கிய மகிழ்ச்சியில் விதவிதமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துக் குவித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு பதிவாக சைத்ரா வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ஒரு உருக்கமான கேப்ஷனையும் கொடுத்திருக்கிறார்.. அது என்னவென்றால், நண்பர்களே எங்கிருந்து ஆரம்பிப்பதுனு எனக்கு தெரியல.
என்னுடைய பயணத்தை நீங்கள் தான் ரொம்ப அழகா ஆக்கினீங்க. அதனால என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். என்னுடைய பயணத்தில் எனக்கு துணை நின்ற கேமரா மேன் தயாரிப்பாளர் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னை எப்போதும் சந்தோஷமாக உணர வைக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி கூறுகிறேன் அதோடு எனக்காக உங்களுடைய நேரத்தை ஒதுக்கி வாக்கு செலுத்திய மக்களை நான் என்னுடைய வாழ்நாளில் எப்போதுமே மறக்க மாட்டேன்.
உங்களுடைய ஆதரவு இல்லாம என்னால தமிழ்நாட்டில் நம்பர் ஒன் இடத்தை டிஆர்பி யில் பெற்றிருக்க முடியாது. நான் ஏற்கனவே சொன்னது போல நன்றி என்பது ஒரு வார்த்தை அல்ல. இது என்னுடைய உணர்வு அதோடு என்னுடைய குடும்பத்திற்கும், என்னுடைய நண்பர்களுக்கும் நன்றி என்று சைத்ரா கூறியிருக்கிறார்.