ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமுதா அம்மாவின் கல்லறையில் சோகமாக அமர்ந்திருக்கிறாள். அமுதா சின்ன வயதில் பள்ளிக்கு போகாமல் இருந்ததை நினைத்து பார்க்கிறாள்.
இதை தொடர்ந்து FLASH CUT-ல் அமுதா சிறுவயதில் பள்ளிக்கு போக பள்ளியில் இருந்து அம்மா இறந்து போனது தெரிந்து வீட்டுக்கு வருகிறாள். ஒருவர் அப்பாவிடம் வேறு ஒரு கல்யாணம் பண்ணால் தான் குழந்தைகளை பார்த்துக்க முடியும் என்று சொல்ல அப்பா வேறு ஒரு பெண் வந்தாள் பிள்ளைகளை சரியாக பார்த்துக்கொள்ள மாட்டாள் என்று சொல்ல அண்ணன் நான் வீட்டை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல அப்பா உன்னால் வீட்டை பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்ல அமுதா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறாள்.
அப்பா அமுதாவிடம் உனக்கு பள்ளிக்கு போக புடிக்கும் தானே என்று கேட்க அமுதா இல்ல அப்பா நான் வீட்டை பார்த்துக்கொள்கிறேன் என்று சோகமாக சொல்கிறாள். பள்ளி செல்லும் பிள்ளைகளை பார்த்து அமுதா feel பண்ணுகிறாள். அண்ணா மற்றும் அனைவரும் படிக்க அமுதா வீட்டு வேலை பார்த்துக்கொண்டு இருந்ததை எல்லாம் நினைத்து பார்க்கிறாள்.
இதனையடுத்து அமுதா சிதம்பரத்திடமும் செல்வராஜிடமும் நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் அத்தை என்னை வெறுத்து ஒதுக்குறாக என கேக்க, சிதம்பரம் நீ உன்னை நம்பலை, ஒரு வாத்தியாரை கல்யாணம் கட்டனும்னு நினைச்ச நீ ஏன் படிக்கல என கேட்கிறார். பிறகு செல்வராஜ் அமுதாவிடம் ஒரே ஒரு முறை உனக்காக வாழ்ந்து பாரு, நீ படி உன்னால முடியும் என ஊக்கப்படுத்துகிறார். பிறகு வீட்டிற்கு அமுதா வருகிறாள்.