விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் மெகா தொடர் சீரியல் தற்போது பல சுவாரஸ்யத்தில் பிரபலமாகிறது. இணையதளம் மற்றும் இல்லதரிசிகள் என பலர் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் நடக்கும் விறுவிறுப்பான தகவல்கள் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன. இதோ.
தமிழும் சரஸ்வதியும் - விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல மெகா தொடர் சீரியல். தற்போது இந்த சீரியலுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. இணையதளம் மற்றும் தொலைக்காட்சி என இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. பல இக்கட்டான கதைக்களத்தை தாண்டி தற்போதும் மீண்டும் இந்த சீரியலுக்கு ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்த சீரியலில் நடக்கும் சுவாரஸ்ய திரைக்கதை பற்றிய முழு தகவல்கள் இங்கு உள்ளன. இதோ
பல சுவாரஸ்யங்கள் நிறைத்த தொடராக பிரபலமான இந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல், சமீப காலமாக பெரிய அளவில் பேசப்படவில்லை, காரணம் இந்த கதைக்களத்தில் நடந்த சில மாற்றங்கள் தான். சரஸ்வதிக்கு மெக்கானிக் கடை அமைப்பது, அன்பு பாராட்டுவது போன்ற நிகழ்வுகள் நடந்து வந்துள்ள நிலையில், தற்போதும் மீண்டும் அர்ஜுனின் சூழ்ச்சி மற்றும் தவறான வியூகம் பற்றி பேச்சுகள் எழுகின்றன. இதனால் மீண்டும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் பரபரப்பான தருணத்தை அடைந்துள்ளது.
அர்ஜுன் செய்த சூழ்ச்சிக்கு துணையாக நின்ற பல கதாபாத்திரங்கள் தற்போது அர்ஜுனை மடக்கி பணம் பறிக்க திட்டமிடுகின்றனர். இதற்கிடையில் அர்ஜுனை மாட்டி விட முயற்சி எடுக்கிறார், நமச்சி மற்றும் சரஸ்வதி. இதற்காக அர்ஜுனை பின் தொடரும் நமச்சி, அர்ஜுனின் நெருங்கிய நண்பனுக்கு தற்போது பணத்தேவை உள்ளதால் அர்ஜுனிடம் படம் கேட்க ஆனால் பணம் இல்லை என்று நண்பனை திட்டுவதை பார்க்கும் நமச்சி, அந்த பணத்தை நாம் கொடுத்து நண்பனை வைத்து அர்ஜுனின் முகத்திரையை கிழிக்க நமச்சி மற்றும் சரஸ்வதி திட்டம் தீட்டுகிறார்.