வெளிநாடுகளில் சுற்றித் திரிந்து வந்த அந்த மில்க் நடிகை வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை தொடங்கி உள்ளதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே ஒரு முறை இதே போலத்தான் வடநாட்டவர் ஒருவருடன் ரகசிய வாழ்க்கையை வாழ்ந்த போது ஆளே அப்ஸ்காண்டாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை நடிகை: நிர்வாணமாக நடித்து பெரும் சர்ச்சையை கிளப்பிய அந்த மில்க் நடிகை சினிமாவை விட்டு கொஞ்ச காலத்துக்கு விலகியே இருந்தார். அந்த காலத்தில் தனது ஆண் நண்பருடன் நெருங்கிய உறவில் இருந்து வந்ததாக அவரது ஆண் நண்பரே போட்டோக்களை வெளியிட பெரிய சர்ச்சை வெடித்தது.
தனது அனுமதியில்லாமல் அவை வெளியிடப்பட்டுள்ளது என்றும் தன்னை பிளாக்மெயில் செய்து தொல்லை கொடுக்கிறார் அந்த நபர் என்றும் புகார் அளித்து திரைத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அந்த மில்க் நடிகை.
வெளிநாட்டிலேயே செட்டில்:
சினிமா பட வாய்ப்புகள் கிடைக்காத பல நடிகைகள் வெளிநாடுகளில் தொழிலதிபர்களை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகி விடுவார்கள். அதே போலத்தான் தற்போது அந்த மில்க் நடிகையும் செட்டில் ஆகி விட்டதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டுள்ளன.
கொஞ்ச காலத்துக்கு வெளியவே அந்த நடிகை தலை காட்ட மாட்டார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. தான் நடித்த படங்கள் தொடர்ந்து ஃபிளாப் ஆகி வரும் நிலையில், சினிமாவை விட்டு விட்டு சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த நடிகை முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.
அடுத்த திருமணத்திற்கு ரெடியா?: அந்த மில்க் நடிகை தனது அடுத்த திருமணத்திற்கே தயாராகி விட்டார் என்றும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வரும் அந்த நடிகை சமீப காலமாக சோஷியல் மீடியா பக்கம் வராமல் சைலன்ட்டாக ஒதுங்கிய நிலையில், நடிகை பற்றிய ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், நடிகை விரைவில் தனது அடுத்த திருமணத்திற்கு ரெடியாகி வருகிறார் என்றும் விரைவில் அனைவரும் அறியும் வண்ணம் தனது காதலரை வெளிப்படுத்துவார் என புகையத் தொடங்கி உள்ளன.