அவருக்கு 3-வது இல்ல, 10-வது பொண்டாட்டி என்றாலும் ஓ.கே தான்..! – போட்டு உடைத்த VJ மகேஸ்வரி…!

post-img

 

நடிகை விஜய் மகேஸ்வரி சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஸ்காட்லாந்து சென்றிருந்த அவர் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார்.


டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் விக்ரம் திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றி பேசி இருக்கிறார்.


ஒருநாள் திடீரென ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் நீங்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவருடைய மனைவியாக நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். இதை கேட்டதும் எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
என்னை யாரோ கலாய்க்கிறார்கள் என்று தான் நான் முதலில் யோசித்தேன். ஆனால், அவர்கள் பேசியது மிகவும் ப்ரொபஷனல் ஆக இருந்ததால் சரிங்க நான் பண்றேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.
அதன் பிறகு என்னுடைய அம்மாவிடம் கூட என்னை யாரும் கலாய்க்கிறார்கள் போல தெரிகிறது என பேசிக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு அடுத்த நாளும் தொலைபேசி அழைப்பு வந்தது.


 விஷால் ஓப்பன் டாக்..!இது போல நீங்கள் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கிறீர்கள். ஏற்கனவே நடிகை மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நீங்கள் நடிக்க இருக்கிறீர்கள். உங்களுக்கு சம்மதமா..? என்று கேட்டார்கள்.
எனக்கு மூன்றாவது மனைவியாக இல்லை பத்தாவது மனைவியாக இருந்தாலும் சரி நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறினேன். அதன் பிறகு தான் அந்த பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
பட வாய்ப்பு கிடைத்தும் என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் கூட இந்த விஷயத்தை நான் பகிர்ந்து கொள்ளவில்லை.
ஏனென்றால் படத்தின் நீளம் கருதி என்னுனுடைய காட்சிகள் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. பல நடிகைகள் பல முன்னணி நடிகைகளுக்கே இது நடந்திருக்கிறது.
நாமெல்லாம் எம்மாத்திரம். நாம் விளம்பரம் செய்துவிட்டு கடைசியாக படத்தில் காட்சிகள் இல்லை என்றால் அவமானம் ஆகிவிடும் என்பதால் இந்த படத்தில் ஒப்பந்தமாகியும் யாரிடமும் நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று வாயை திறக்கவில்லை அப்படி இருந்தும் நான் நடித்த பெரும்பாலான காட்சிகள் நீக்கப்பட்டுத்தான் படம் வெளியானது என்றும்கூறியிருக்கிறார் நடிகை விஜே மகேஸ்வரி.
 
 

 

Related Post