மே மாதம் வெளியான குட்நைட் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
மே மாதம் வெளியான குட்நைட் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதனையறித்த விஜய் சேதுபதி மணிகண்டனுக்காக ஓடிவந்து செய்த உதவி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மணிகண்டனுக்காக ஓடி வந்த விஜய் சேதுபதி:
ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவில் பயணிக்கத் தொடங்கியவர் மணிகண்டன். சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக்கொண்டே கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள் படங்கள் மூலம் ஓரளவு கவனம் ஈர்த்த மணிகண்டன், விக்ரம் வேதா வெளியானதும் ரொம்பவே பிரபலமானார்.
புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடித்த இந்தப் படத்தின் வசனம் முழுவதும் மணிகண்டன் தான் எழுதியதோடு போலீஸ் கேரக்டரிலும் நடித்திருந்தார். விக்ரம் வேதா படத்தின் வசனம் மூலம் பிரபலமான மணிகண்டன், அடுத்தடுத்து காலா, சில்லு கருப்பட்டி, ஜெய்பீம் போன்ற படங்களில் மிக முக்கியமான கேரக்டர்களில் நடித்தார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் வெளியான குட்நைட் திரைப்படம் மணிகண்டனுக்கு மிகப் பெரிய சக்சஸ் கொடுத்தது. விநாயக் சந்திரசேகரன் இயக்கிய இந்தப் படத்தில் குறட்டை பிரச்சினையால் அவதிப்படும் ஹீரோவாக ரொம்பவே வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார். மணிகண்டனுடன் ரமேஷ் திலக், மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்த குட்நைட், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்தது.
இந்தப் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோ மீண்டும் மணிகண்டனை நாயகனாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி பிரபு ராம் வியாஸ் என்பவர் இயக்கும் புதிய படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்க, ஸ்ரீ கெளரி ப்ரியா, கண்ணா ரவி ஆகியோர் மணிகண்டனுடன் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார் மணிகண்டன். அதுமட்டும் இல்லாமல் விக்ரம் வேதா படத்திற்காக சூப்பரான வசனங்கள் எழுதிக்கொடுத்த மணிகண்டனுக்காக, விஜய் சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளாராம். ஆரம்பமே அமர்க்களமாக உள்ளதால் புதிய படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என நம்பிக்கையில் உள்ளார் மணிகண்டன்.