மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் வீரன் படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆதிராராஜ், வில்லனாக வினய் நடித்துள்ளார்.
ஹிப்ஹாப் ஆதியின் வீரன் : இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டன ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்து நடித்தும் உள்ளார். இப்படத்தில், ஹிப் ஹாப் ஆதியை மின்னல் ஒன்று தாக்கி விடுகிறது. இதனால் அவரது உடம்பில் ஒரு சில மாற்றம் ஏற்பட்டு, விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அவரக்கு கிடைத்த அந்த விசேஷ சக்தியால், தனது கிராமத்திற்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்கிறார். அதன்பிறகு என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.
மின்னல் முரளி : மலையாளத்தில் பேசில் ஜோசப் இயக்கத்தில் வெளியான மின்னல் முரளி படத்தில் சில மாற்றங்களை செய்து சூப்பர் ஹீரோ படமாக ஹிப் ஹிப் ஆதியை களம் இறக்கி உள்ளார் இயக்குநர். ஆனால் மின்னல் முரளி படத்துடன் வீரன் படத்தை ஒப்பிடும் போது இந்த படத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.
மோசமான விமர்சனம் : படம் வெளியானதில் இருந்து படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் வந்தன. மின்னல் முரளி திரைப்படம் குழந்தைகளுக்கு பிடித்தது போல, அதே கதைக்களத்தை கொண்ட வீரன் திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் வெளியான 6 நாட்களிலேயே தியேட்டரில் ஆட்களே இல்லை.
விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி : இப்படத்துக்காக சுமார் ரூ.8 கோடியைக் கொடுத்திருக்கும் விநியோகஸ்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நஷ்டமீதிப் பணம் தயாரிப்பு நிறுவனத்தால் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும் என்றாலும் இலாபம் வரும் என்று நினைத்த படம் வட்டி, நஷ்டத்தைக் கொடுத்துவிட்டதே என்ற வருத்தத்தில் உள்ளனர்.