சினிமாவில் அறிமுகமான புதிதில் கிடுகிடு என பட வாய்ப்புகள் பெற்று முன்னணி நடிகை அந்தஸ்துக்கு மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு நடிகை சூழ்ச்சியின் காரணமாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டீர்கள்.
அதைப் பற்றிய பதிவுதான் இது. நடிகை சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் ஆட்சி செய்ய தொடங்கிய பொழுது அவருக்கு ஈடு கொடுக்க எந்த நடிகையாலும் முடியவில்லை.
ஆனால், அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே இருந்த நடிகை ராணி பத்மினிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
தன்னுடைய 19 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த இவருக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சி. நடிகை சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட் இல்லை என்றால் என்ன.. ராணி பத்மினி இருக்கிறார் என்று அவர் பின்னால் செல்ல தொடங்கினார்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.
ஆனால் காலம் செய்த கொடுமை என்னவென்றால், நடிகை ராணி பத்மினி 24 வயதிலேயே கொடூரமாக துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டார் என்பது தான்.
மலையாளம் தமிழ் ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் ஐந்தே ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
தமிழில் குறைவான படங்களில் தான் நடித்திருக்கிறார். சென்னை அண்ணாநகரை சேர்ந்த இவர் தன்னுடைய பங்களாவில் வசித்து வந்தார். அப்போது தங்களுக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் உதவியாக இருப்பதற்காகவும் பாதுகாப்பாக இருப்பதற்காகவும் நேர்காணல் நடத்தி அதன் மூலம் மூன்று பேரை வீட்டு வேலைக்கு அமர்த்திருக்கிறார்.
சமையல் செய்வதற்கு ஒருவர், வாட்ச்மேன் ஒருவர், டிரைவர் ஒருவர் என மூன்று பேரை நடிகை ராணி பத்மினி வேலைக்கு அமர்த்திருக்கிறார். மின்னுவதெல்லாம் பொன்னென்று நினைத்த நடிகை ராணி பத்மினி தன்னுடைய அனுபவமின்மை காரணமாக தன்னுடைய பட வாய்ப்புகள் சம்பாதிக்கும் பணம் செய்யும் முதலீடுகள் ஆகியவற்றையெல்லாம் தன்னுடைய டிரைவர் வாட்ச்மேன் சமையல்காரர் என மூன்று பேர் முன்னிலையிலும் பேசியிருக்கிறார்.
!இதுதான், அவருடைய மரணத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இவருடைய பணத்திற்கும் அவர் வைத்திருக்கும் லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளுக்கும் ஆசைப்பட்ட அந்த மூன்று பேரும் கூட்டு சேர்ந்து இவர்களை கொலை செய்து விட்டு பணம் மற்றும் நகையுடன் தப்பிக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள்.
இதற்காக நாள் குறித்த இந்த மூன்று பேரும், நடிகை ராணி பத்மினி மற்றும் அவருடைய தாய் இருவரும் மது போதையில் இருக்கும் போது இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு அவர்களுடைய சடலங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு வீட்டில் இருந்த பணம் நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்று இருக்கின்றனர்.
வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு மாயமாகி இருக்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் நடிகையின் உடலும் அவருடைய அம்மாவின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது திரையுரையில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு போட்டியாக வந்து குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ராணி பத்மினி வெறும் 24 வயதிலேயே அநியாயமாக இறந்து போனது அப்போது இந்த அவருடைய ரசிகர்களை ரணமாக்கியது என்று தான் கூற வேண்டும்.
இவருடைய மரணத்திற்கு பின்னால் பல்வேறு VVIP-க்களின் பெயரும் அடிபட்டது. திட்டமிட்ட இந்த கொலைக்கு பின்னால் இருப்பது வெறும் பணமோ, நகையோ மட்டுமல்ல, வேறு எதோ மிகப்பெரிய சதி இருக்கிறது கிசுகிசுக்கள் மிளாகாய் பஜ்ஜி கணக்காக பறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.