அடுத்த சீரியலில் களமிறங்கிய ரச்சிதா மகாலட்சுமி.. கெத்தான வீடியோ இதோ!

post-img

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார் ரச்சிதா.

கணவர் தினேஷுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். விரைவில் அவரை விவாகரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய தொடரில் நடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி: நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர்மூலம் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றவர். தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை பெரிதாக்கியவர். இதையடுத்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை கொடுத்த ரச்சிதா மகாலட்சுமி, தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தவில்லை. இதற்கு இவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையும் காரணமாக அமைந்தது.

காதலித்து தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி, அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய கணவர், தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்வதாகவும் அசிங்கமாக பேசுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இருவரும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து தாங்கள் இணைவதற்கு வாய்ப்பில்லை என்று சமூக வலைதளங்களில் உறுதியாக கூறிவருகிறார் ரச்சிதா. இதனிடையே சொந்த பிரச்சினை காரணமாக தொடர்ந்து சீரியல்களில் ரச்சிதா நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போலீஸ் ஆபிசராக கெத்து காட்டுகிறார். கண்ணில் கூலர்சுடன் இந்த கெட்டப்பில் அவர் சிறப்பாக பொருந்தியுள்ளார்.

இந்த வீடியோவிற்கு பின்னால் பேட்ட படத்தின் தீம் மியூசிக்கை ஓட விட்டுள்ளார். மேலும் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சைலண்டாக தன்னுடைய அடுத்த சீரியலில் அவர் கமிட்டாகியுள்ளதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதாவை 14 லட்சம் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அடுத்தடுத்த பதிவுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரப்பி வருகிறார் ரச்சிதா. கடந்த சில மாதங்களாக தன்னுடைய சொந்த வாழ்க்கை கொடுத்த பிரச்சினைகள் மற்றும் வலியால் தொடர்ந்து சோகமான பதிவுகளையும் வெளியிட்டு வந்தார் ரச்சிதா. இந்நிலையில் தற்போது தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து மீண்டு அவர் மீண்டும் தன்னுடைய சீரியல் வாழ்க்கையில் கவனம் செலுத்தியுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Related Post