சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் என்றாலே அன்று தமிழ்நாடு முழுவதும் திருவிழா கொண்டாட்டம் தான். படம் வெற்றியோ தோல்வியோ ரஜினியை திரையில் பார்த்தே ஆகவேண்டும் என்று ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளில் வரிசைகட்டி நிற்பார்கள்.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி செரீப், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், காமெடி நடிகர் யோகி பாபு, விநாயகன், தமன்னா, மிர்ணா, வசந்த் ரவி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
ஆக்ஷன், டார்க் காமெடி திரைப்படமாக ஜெயிலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணா நடித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் அசத்தலாக இசையமைத்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெறும் 4 நாட்களில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. மேலும் இப்படம் வெளியாகி 15 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் ஜெயிலர் திரைப்படம் 15 நாட்களில் உலகளவில் சுமார் 550 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும், வரும் வார இறுதி நாட்களில் வசூல் 600 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.