அனுமனுடன் படம் பார்க்க ஓவர் ரேட்டா இருக்கே...ஆதிபுருஷ் டிக்கெட் 2000 ரூபாயா..?

post-img

ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இயக்குநர் ஓம் ராவத் இயக்கியிருக்கும் படம் ஆதிபுருஷ். பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த பிரபாஸ் இப்படத்தில் நடித்திருக்கிறார். சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். கீர்த்தி சனோனியும் நடித்திருக்கிறார்.

ஹிந்தி,தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Adipurush First Day First Show Ticket Price is 2000 rupees

படத்தின் பிஸ்னஸ்:

ஆதிபுருஷ் படத்தின் முதல் டீசரில் கிராஃபிக்ஸ் காட்சிகள் படு மொக்கையாக இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். அதனையடுத்து கிராஃபிக்ஸ் தரத்தை உயர்த்தும் பணியில் படக்குழு ஈடுபட்டது. அதற்காக நூறு கோடி ரூபாயை படக்குழு செலவழித்ததாக பேச்சு எழுந்ததை. அதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தச் சூழலில் படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது.

ஆதிபுருஷ் ட்ரெய்லர் 2:

இந்தச் சூழலில் கடந்த ஆறாம் தேதி திருப்பதியில் ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரிலும் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமாராக இருக்கிறதென்றே பலரும் கூறினர். இருப்பினும் ட்ரெய்லருக்கு ஒருதரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்து அதனை இணையத்தில் ட்ரெண்டாக்கினர். படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் சூழலில் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது.

Adipurush box office preview: Hindi version likely to open at ₹25-30 cr |  Bollywood - Hindustan Times

அமெரிக்காவில் ஆதிபுருஷ் நிலவரம்:

நிலைமை இப்படி இருக்க அமெரிக்காவில் ஓட்டப்படும் ஷோக்களில் தமிழ் மொழி வெர்ஷனுக்கு மொத்தமே 24 டிக்கெட்டுகள்தான் புக்காகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தத் தகவல் பொய்யானது. படத்துக்கான புக்கிங் சிறப்பாக நடந்துவருவதாக ஆதிபுருஷ் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.

ஆதிபுருஷ் முதல் ஷோ டிக்கெட் விலை:

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் விலை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது டெல்லியில் இருக்கும் பிவிஆர் வேகாஸ் லக்ஸ் திரையரங்கில் ஆதிபுருஷ் முதல் ஷோவுக்கான டிக்கெட் விலை 2000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும், நொய்டாவில் இருக்கும் பிவிஆர் கோல்ட் லாஜிக்ஸ் சிட்டி சென்ட்டரில் டிக்கெட் விலை 1650 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

Adipurush' advance booking looks promising, over 10,000 tickets sold |  Hindi Movie News - Times of India

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனுமனுடன் சேர்ந்து படம் பார்க்க ஓவர் ரேட்டா இருக்கே என சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்துவருகின்றனர். அதேசமயம் அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அனுமனுக்கு பக்கத்து சீட்:

இதற்கிடையே படம் வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. மேலும் அனுமனுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுக்கு பக்கத்து சீட்டுக்கான டிக்கெட் விலை அதிகளவில் விற்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதனை படத் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.


Related Post