கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜீ நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று ரொம்பவே சிம்பிளாக நடந்திருக்கிறது. விஷால் இப்போது ஆதிக் ரவிச்சந்தின் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். துப்பறிவாளன் 2 படத்தையும் விஷால் இயக்கி நடிக்கிறார். இந்நிலையில் தற்போது ஹரியுடன் இணைந்திருக்கிறார்.
ஹரியுடன் விஷால் இணைந்த தாமிரபரணி, பூஜை படங்கள்தான் சண்டைக்கோழிக்கு படத்துக்குப் பிறகு விஷாலை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்தது.
சமீப காலமாக முழு ஆக்ஷன் படங்களில் அவர் கவனம் செலுத்தி வந்தார். பல படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் விஷாலே இயக்குநர் ஹரியிடம் பேசியிருக்கிறார்.
அதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு முடிவானதாகச் சொல்கிறார்கள். ஹரியின் வழக்கமான ஃபார்முலா படம். நெல்லை, காரைக்குடியில் இதன் படப்பிடிப்பும் இருக்கும் என்றும் ஜூலையில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்கிறார்கள். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ், உள்பட சிலர் பரிசீலனையில் உள்ளனர்.இது விஷாலின் 34வது படமாகும். அவரது 35 வது பட அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்கிறார்கள்.