இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி வெளியானது.
இன்றுடன் இரண்டு வாரங்களை கடந்து இருக்கக்கூடிய இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மோகன்லால் சிவராஜ்குமார் சுனில் ஜாக்கி சரோப் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மிருனா தமன்னா உள்ளிட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது இந்த திரைப்படம் தற்போது வரை உலக அளவில் 540 கோடி ரூபாயும் தமிழகத்தில் மட்டும் 165 கோடி ரூபாயும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் இந்த அளவுக்கு வசூல் வேட்டை நடத்துமா..? என்ற விவாதங்கள் இணைய பக்கங்களில் இருந்திருக்கின்றது.