கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா.
முன்னணி நடிகை: இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
பிஸி தமன்னா: தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் அவரை பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன் படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகிறது.
ஜெயிலர் தமன்னா: தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்ற கருத்து பரவலாக எழுந்த சூழலில் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். ரஜினிகாந்த்தை வைத்து அவர் இயக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்திருக்கிறார். அதேபோல் சுந்தர் சி இயக்கும் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்திலும் தமன்னா கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமன்னாவின் காதல்?: இந்நிலையில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விஜய் வர்மாவுக்கு தமன்னா கொடுத்த லிப் லாக் அதை உறுதி செய்யும்படி அமைந்தது. தற்போது இருவரும் கறுப்பு நிற உடையில் அவுட்டிங் சென்ற புகைப்படம் மீண்டும் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.