படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல தயாரிப்பாளர் மீது "காந்த கண்ணழகி" நடிகை புகார்

post-img

தமிழில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவர் சிவகார்த்திகேயனுடன் நடனம் ஆடிய காந்த கண்ணழகி பாடல் ஹிட்டடித்தது. தற்போது கார்த்தியுடன் ஜப்பான் படத்தில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பட வாய்ப்புகளுக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பட அதிபர் குறித்து பகீர் புகாரை நடிகை அளித்துள்ளார். இதுகுறித்து அனு இம்மானுவேல் கூறுகையில் நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை சிலர் தவறாக அணுகினார்கள். பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என சில பெரிய மனுஷன்களே என்னை அழைத்தனர்.

அண்மையில் ஒரு பெரிய தயாரிப்பாளர் கூட என்னை படுக்கைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் இதற்கெல்லாம் நான் அசராமல் என் குடும்பத்தினரின் துணையுடன் பிரச்சினைகளை கையாண்டேன். இது போன்ற பிரச்சினைகள் வந்தால் குடும்பத்தினருடன் சந்திப்பதுதான் சிறந்த விஷயம். அவர்கள் எப்போதும் நமக்கு உதவியாகவே இருப்பார்கள்.

எந்த துறையாக இருந்தாலும் பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் மோசமான நபர்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களை பார்த்து பயப்படாமல் துணிவுடன் முன்னேற வேண்டும் என பெண்களுக்கு அறிவுரையையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் விதத்தில் பேசியுள்ளார். அனு இம்மானுவேல் கேரளத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஸ்வவப்ன சஞ்சாரி எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து 2016 இல் ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அது போல் தெலுங்கிலும் நடித்துள்ளார்.அண்மைக்காலமாக சினிமா நடிகைகளும் சீரியல் நடிகைகளும் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார். சினிமா துறை, டிவி துறை என்றில்லை பல இடங்களில் பெண்கள் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் எனும் விஷயத்தை சந்தித்து வருகிறார்கள்.


Related Post