“காணாமல் போன கௌசல்யா.. இல்லற வாழ்க்கையை விரும்பல..” காரணம் இது தான்..!

post-img


தமிழ் சினிமாவில் டீசன்டாக நடித்த நடிகைகளில் கௌசல்யாவும் ஒருவர். பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அதீத கவர்ச்சி காட்சிகளில் அவர் நடித்தது இல்லை.
தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் நிறைய படங்களில் கௌசல்யா நடித்திருக்கிறார்.


காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், சொல்லாமலே, பிரியமுடன், பூவேலி, உன்னுடன், ஏழையின் சிரிப்பில், வானத்தை போல, சந்தித்த வேளை, சந்தோஷ் சுப்ரமணியம் என தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார்.


இதில் பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். சில படங்களில் மட்டும் சில காட்சிகளில் வந்து செல்லும் கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார்.

 

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவியின் அக்காவாக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழ் படங்களில் கெளசல்யாவை காண முடியவில்லை.
கௌசல்யா..
பிரபல சினிமா நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கெளசல்யா குறித்து ஒரு நேர்காணலில் கூறுகையில், நடிகை கெளசல்யா பெங்களூருவில் செட்டிலாகி விட்டார்.
மிகவும் ஒல்லியான ஒரு நடிகை, சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே சதைப்பிடிப்பு இல்லாமல் அப்படித்தான் இருந்தார். சில வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.


சில டிவி சீரியல்களிலும் நடித்துக்கொண்டு இருந்தார்.
இல்லற வாழ்க்கை விருப்பம் இல்ல..
ஆனால் கெளசல்யாவுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லையா, என்னவென்று தெரியவில்லை. இதுவரை அவர் கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை.
இதுபற்றி கேட்டால், இப்படியே போகட்டும். எனக்கு பாதுகாப்பு வேண்டும் எனக்கு தோன்றுகிற நேரத்தில் திருமணம் செய்துக் கொள்கிறேன்.
இப்போதைக்கு திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறேன் என்று கூறியதாக, பயில்வான் ரங்கநாதன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன கௌசல்யா, இல்லற வாழ்க்கையையும் விரும்பாமல் இப்படி தனிமையில் இருப்பதற்கான காரணம் இப்போதைக்கு அவருக்கு பாதுகாப்பு தேவையில்லை என்பதுதான்.

 

 

Related Post