தமிழ் சினிமாவில் ஜோதிகா மிக முக்கியமான ஒரு நடிகையாக, தன் சிறந்த நடிப்பாற்றல் மூலம் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். பல படங்களில் தன் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார்.
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தனது சினிமா பயணத்தை துவக்கினார்.
ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து கரம் பிடித்து, அவருடன் தன் வாழ்க்கை பயணத்தையும் இணைத்துக் கொண்டார்.
ஜோதிகாவை பொருத்த வரை நல்ல அழகும், அவரது நல்ல நிறமும், முட்டை கண்களும், முக பாவனைகளும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உறுதுணையாக இருக்கின்றன.
காக்க காக்க, சந்திரமுகி, தூள், திருமலை, குஷி, சில்லுனு ஒரு காதல், தெனாலி, வேதம், பூவெல்லாம் உன் வாசம், வாலி, டும் டும் டும், பேரழகன் என பல படங்களில் தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் ஜோதிகா.
இப்போதும் கூட ஜோதிகா நடிப்பில் ஒரு முதிர்ச்சியான அனுபவத்தை காண முடிகிறது.
குறிப்பாக மொழி படத்தில், வாய் பேசாத பெண்ணாக ஜோதிகா நடிப்பு வேற லெவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1990 – 2000ம் ஆண்டுகளில் அஜீத், விஜய்க்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் ஜோதிகா தான். சூர்யாவை திருமணம் செய்த பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
துவக்கத்தில் சூர்யா – ஜோதிகா காதலை, நடிகர் சிவக்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது தனது சிறந்த மருமகள் என ஜோதிகாவை பாராட்டி வருகிறார்.
ஜோதிகா..
ஜோதிகா, தன் கணவர் சூர்யா மற்றும் தனது பிள்ளைகளுடன் இப்போது மும்பையில் செட்டிலாகி விட்டார். அவர் மம்முட்டியுடன் நடித்த காதல் தி கோர் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜோதிகா, அடிக்கடி தனது வீடியோக்களை அப்டேட் செய்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், ஜிம்மில் ஜோதிகா வியர்வை விறுவிறுக்க ஹார்டாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக காட்சிகள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
ஐஸ் பாத்..
இப்போது சிவப்பு நிற நீச்சல் உடையில் ஐஸ் பாத் எடுக்கும் நடிகை ஜோதிகாவின் வீடியோ காட்சிகள் சில இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
சில நொடி காட்சியாக இருந்தாலும் நீச்சல் உடையில் பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அழகில் அவர் இருக்கும் இந்த வீடியோ தீயாக பரவி வருகிறது.
பிக்பாஸ் அபிராமி பதில்..!