இவ்வளவு பெண்கள் இருக்காங்க.. பழகுவதற்கு வேறு பொண்ணே கிடைக்கலையா?.. சீமானின் கழுத்தை !

post-img

சென்னை: இத்தனை பெண்கள் இருக்கும் இடத்தில் உங்களுக்கு பழகுவதற்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா என தன் குரல் வளையை நெரித்து மனைவி கயல்விழி கேட்டதாக சீமான் தெரிவித்துள்ளார்.


நடிகை விஜயலட்சுமி, சீமானுடன் வாழ்த்துகள் எனும் படத்தில் நடித்த போது காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு அவர் கயல்விழி என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் பலமுறை விஜயலட்சுமி புகாராக தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். சீமானை ஜெயிலுக்கு அனுப்பாமல் நான் சென்னையை விட்டு கிளம்ப மாட்டேன் என கூறியிருந்தார். இதன் எதிரொலியாக நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றார். எனினும் செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று சீமான் ஆஜராக வேண்டும் என காவல் துறை கூறிய நிலையில் சீமானும் இன்று ஆஜரானார். அவரை பார்க்க 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.


சீமான் தனது மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழியுடன் வந்திருந்தார். சீமானிடம் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 2 பெண்களால் நான்தான் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டேன். 13 ஆண்டுகளாக வழக்கு போட்டு என்னை வன்கொடுமை செய்தனர். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்கிறார்.

 

அப்போது அவருடைய மனைவியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது எனக்கு மனஉளைச்சல் எல்லாம் இல்லை. எனக்கு பலர் போன் செய்து ஆறுதல் சொல்லும் போதெல்லாம் எதுக்கு சொல்றாங்கன்னுத்தான் தோன்றும். அவரே மலை போல் நிற்கும் போது எனக்கு என்ன கவலை? என கேள்வி எழுப்பினார். அப்போது சீமான், என் மனைவி இந்த விவகாரத்தில் கோபப்பட்டு என் குரல் வளையை நெரித்து, இவ்வளவு பெண்கள் உள்ள கொல்லையில் உனக்கு பழகுவதற்கு வேறு பொண்ணே கிடைக்கலையா என கேட்டார். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

 

Related Post