குற்றாலத்தில் குதூகலம்... இயற்கை யின்இன்ப அதிர்ச்சி .. மாறிய வானிலை

post-img

ஒரு மாத இடைவேளைக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அற்புதமான சுற்றுலா தளம் ஆகும். மலைப்பகுதி என்றாலும், மிக உயரமான மலைப்பகுதியாக இருக்காது. தென்காசியில் இருந்து வெறும் 6 கிலோ மீட்டர் தூரத்தில் குற்றால அருவி இருக்கிறது. குற்றால அருவியை சுற்றியுள்ள ஏராளமான சிறிய அருவிகள் அருகிலேயே உள்ளன. மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலியருவி என அருவிகள் மையமாக குற்றலாம் இருக்கிறது.

இங்கு தென்மேற்கு பருவ மழை காலத்தில் அடிக்கடி மழை விழும். அதன் காரணமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்களில் சீசன் களை கட்டும். எப்போது மழை பெய்யும், எப்போது குளுகுளுவென மாறும் என்றே தெரியாது. அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும்.

குற்றாலத்தின் குளுகுளு கால நிலையை அனுபவிக்க தமிழகம், கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வருவார்கள். மெயின் அருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழைய அருவி, புலியருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

இந்நிலையில் இந்த முறை தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவிலலை. பெரிய அளவில் கைவிட்டுவிட்டது. பருவ நிலை மாற்றத்தால் தென்காசி மாவட்டத்தில் மட்டுமில்லாமல், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் போதிய அளவு பெய்யவில்லை. கடந்த ஒரு மாதமாக சரியான மழை பெய்யவில்லை. இதனால் பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்பட அருவிகளில் நீர் வரத்து வரண்டு காணப்பட்டது. மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து மிக குறைவாகவே இருந்தது. இதனால் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தை சந்தித்தனர். குறைவான தண்ணீரிலேயே குளித்து சென்றனர்.

இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால், குற்றாலம் மலைப்பகுதிகளிலும், ஐந்தருவி மலைப்பகுதிகளிலும் நேற்று மாலை பெய்த திடீர் மலையின் காரணமாக தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து வர தொடங்கி உள்ளது. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவிற்கு குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் இன்று குற்றாலம் வந்துள்ளனர். இதனால் மீண்டும் குற்றாலம் சீசன் களை கட்டியுள்ளது.

Related Post