மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பதில் அளிக்குமாறு செய்தியாளர்கள் கேட்டனர். ஆனால் அவர் ஊடகங்களைத் தவிர்த்துவிட்டு ஓடிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலியல் புகாரில் பாஜக எம்.பி.,-யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்-கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களது பதக்கங்களை கங்கை ஆற்றில் விட போவதாக அறிவித்து பின்னர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த முடிவை கைவிட்டனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகியிடம், செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
அப்போது, "கிளம்புங்க, கிளம்புங்க, எனக் கூறிக்கொண்டே வேகமாக ஓடத் தொடங்கிய அமைச்சர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.