நியூயார்க்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் பல பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்க போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் ஆட்சியை விட்டு செல்லும் முன் பொதுவாக சில குற்றவாளிகளை தண்டிக்க முடியும். இந்த முறை ஜோ பிடன் இதை பயன்படுத்தி பலாத்கார குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனது மகன் உட்பட பலரை விடுதலை செய்துள்ளார். முக்கியமாக மரண தண்டனையில் இருக்கும் பலருக்கும் கூட மன்னிப்பு வழங்கி உள்ளார்.
ஜனாதிபதி பிடன், தனது பதவியில் இருக்கும் கடைசி மாதத்தில், மரணதண்டனைக்காக காத்திருக்கும் 40 கைதிகளில் 37 பேரின் தண்டனைகளை குறைத்து உள்ளார். பரோலில் செல்ல வாய்ப்பு இல்லாத ஆயுள் தண்டனை கைதிகளாக இவர்களை அறிவித்தார்.
இப்படிப்பட்ட விடுவிக்கப்பட்டவர்களில் 9 பேர் சக கைதிகளைக் கொன்ற குற்றத்திற்காகவும், 4 பேர் வங்கிக் கொள்ளையின் போது செய்யப்பட்ட கொலைகளுக்காகவும், சிறைக் காவலரைக் கொன்றதற்காகவும் சிறையில் இருந்தனர். இவர்களைத்தான் பிடன் விடுதலை செய்துள்ளார். அதோடு பலாத்கார குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனது மகன் உட்பட பலரை விடுதலை செய்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் பல பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்க போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
அதன்படி, நம் நாட்டில் உள்ள மிக மோசமான கொலையாளிகள் 37 பேருக்கு ஜோ பிடன் மரண தண்டனையை நீக்கி உள்ளார். இதை ஏற்க முடியாது. அவரின் செயல் நாட்டையே மோசமாக்கும். இந்த நாட்டின் பாதுகாப்பையே சீர்குலைக்கும்.
பிடன் எதை எல்லாம் செய்ய கூடாதோ.. அதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார். அவர் ஆட்சியை விட்டு போகும் முன் இன்னும் சிலரை விடுவிக்கப்போகிறார் என்று நினைக்கிறேன். அவர் இந்த நாட்டை மோசமாக மாற்ற போகிறார்.
நான் அப்படி விடமாட்டேன். பாலியல் பலாத்காரம் கொலைகாரர்கள், கொலைகாரர்கள், சிறுவர் சிறுமிகளை துன்புறுத்துபவர்களை விட மாட்டேன். அவர்களை எல்லாம் கண்டிப்பாக தூக்கு தண்டனைக்கு உட்படுத்துவேன். அவர்களுக்கு கண்டிப்பாக தூக்கு சண்டை கிடைக்கும். நான் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சட்டம் கடமையை செய்யும். சட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். தூக்கு தண்டனையை குறைக்காமல் பார்த்துக்கொள்வேன், என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் முதல்நாள் கையெழுத்து:
அதோடு, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தான் அதிபராக பதவி ஏற்ற முதல் நாளே LGBTQ பிரிவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளார். அதன்படி "திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவேன்" என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து உள்ளார்.
அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த நிகழ்வில், குழந்தைகளை பாலியல் ரீதியாக மாற அனுமதிக்க மாட்டேன். அவர்களுக்கு பாலின சிகிச்சை செய்ய முடியும். திருநங்கைகளை ராணுவத்திலிருந்து வெளியேற்றுவேன். விளையாட்டு போட்டிகளில் பாலின மாற்றம் செய்தவர்கள் கலந்து கொள்ள முடியாது.
தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் நடக்கும் பாலினம் தொடர்பான வகுப்புகளை தடுக்கவும் நான் முதல் நாளே முக்கியமான உத்தரவுகளில் கையெழுத்திடுவேன். ஆண்களை பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலக்கி வைக்க நடவடிக்கை எடுப்பேன். "ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.