தம்பதியுடன் முதலிரவில் தாய்.. மொட்டை அடித்த கல்யாண பெண்.. தொப்பை ஆண்மகன்.. அதிர வைத்த பழங்குடியினர்

post-img

அடிஸ் அபாபா (ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா: பசுவின் ரத்தம் குடிக்கும் ஆண்மகனை பற்றி தெரியுமா? சடலத்தை பிய்த்து சாப்பிடும் உறவுகளை பற்றி தெரியுமா? கல்யாணத்தில் மொட்டை அடிக்கம் மணப்பெண் பற்றி தெரியுமா? இதெல்லாம் கேட்கவே அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக இருக்கா? இப்படியான சில பழக்கவழக்கங்கள் இன்னமும் ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடம் நிறைந்து காணப்படுகிறது.
ஆப்பிரிக்கா நாடுகளில் வாழும் பழங்குடியின மக்களிடம் காணப்படும் திருமண நடைமுறையானது, இன்றுவரை உலக நாடுகளுக்கே ஆச்சரியங்களை தந்து கொண்டிருக்கிறது. இவர்களில் பலர், இன்றும்கூட வெளி உலகத்துடன் தொடர்பின்றி, காட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்கள்.. நாகரீக வாழ்க்கைக்குள் நுழையாமல், தங்களது பல் நூறு வருட மரபு, பாரம்பரியம், கலாச்சாரத்தையே இன்றுவரை நம்பிக்கையுடன் கடைப்பிடித்து வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகள்: உதாரணத்துக்கு நமீபியாவை எடுத்துக் கொண்டால், வெறும் 50 ஆயிரம் மக்கள்தொகையே உள்ள பகுதியாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, சொந்த மனைவியையே விருந்தாக்கும் நடைமுறை உள்ளது.
ஆனால், எத்தியோப்பியாவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தாலும், ஓமோ என்ற பள்ளத்தாக்கிற்கு வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.. ஏனென்றால், ஒவ்வொரு வருடம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும், இங்குள்ள போடோ பழங்குடியின மக்கள் "கேல்" என்ற திருவிழாவை நடத்துகிறார்கள். என்று அழைக்கப்படுகிறது.
எத்தியோப்பியா: இவர்களின் வழக்கப்படி, யார் பெரிய தொப்பையை வைத்திருக்கிறார்களோ அவர்களே வீரம் செறிந்த ஆணாக கருதப்படுகிறார்கள். ஆனால், இப்படி தொப்பையை வளர்க்க வேண்டுமானால், அந்த ஆண் மகன் படாதபாடு பட வேண்டியிருக்கும். திருவிழாவில் பங்கேற்பதற்கு 6 மாதத்துக்கு முன்பிருந்தே தனி குடில்களில் தங்க வைக்கப்படுவார்கள். பெண்களுடன் உடலுறவு கொள்ளவும் அனுமதி மறுக்கப்படும்.

இந்த காலகட்டத்தில், உடலில் கொழுப்புகள் அதிகம் சேர வேண்டும். உடல் எடையை அதிகரிக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பசுவின் பால் கலந்த ரத்தத்தை, குறிப்பிட்ட அளவு தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதற்காகவே, ஒவ்வொரு பசுவிலிருந்தும் சிறு ஓட்டையிட்டு, ரத்தம் எடுக்கப்படும்.. இந்த துளையை களிமண் கொண்டு அடைத்துவிடுவார்களாம்.
ஆனால், பசுவிலிருந்து ரத்தம் எடுத்ததுமே குடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் ரத்தம் உறைந்துவிடும். ஆனால், இந்த ரத்தத்தை குடிக்க பலரும் தயங்குவார்களாம். சிலருக்கு வாந்தி வந்துவிடுமாம்.
மலாவி மக்கள்: அதேபோல, ஆப்பிரிக்காவின் மலாவி பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களோ, மனிதனின் சடலத்தை சாப்பிடுவார்களாம். யாராவது இறந்துவிட்டால், அவர்களுக்கு உரிய முறையில் மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த சடலத்தை புனித தலத்திற்கு எடுத்து செல்வார்கள்.

அங்கு சடலத்தின் தலையை வெட்டி எடுத்துவிட்டு, உடலின் உட்பகுதியை சுத்தமான நீரில் கழுவுவார்கள். பிறகு இறந்தவரின் சடலத்தை நெருப்பில் வாட்டி சுட்டு சாப்பிடுவார்களாம். அப்போது சடலத்தை சுற்றி உட்கார்ந்து கொண்டு, பாடிக்கொண்டே அழுவார்களாம்.. அழுதுகொண்டே சாப்பிடுவார்களாம்.
முதலிரவு: அதேபோல, இதே ஆப்பிரிக்காவில் மற்றொரு பழங்குடியின பிரிவினரில், திருமணமான தம்பதிகளுடன், மணமகளின் அம்மாவும் முதலிரவில் பங்கேற்பார். அன்பாக, அனுசரணையாக கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சியாக எப்படி வாழ வேண்டும், என்றெல்லாம் மணமகளுக்கு, அவரது தாய் சொல்லி தருவாராம்.
அதேபோல, கென்யாவின் போரானா என்று சொல்லப்படும் பழங்குடியினப் பெண்கள், தங்கள் திருமணத்துக்கு மொட்டை அடித்து கொள்ள வேண்டுமாம்.. மணப்பெண் கல்யாணத்தில் மொட்டையடித்துக்கொண்டால், மணமகனுக்கு மிக அடர்த்தியான நீண்ட முடி வளரும் என்பது நம்பிக்கையாகும். அதேசமயம் ஆண்கள், தங்களுக்கு அடர்த்தியான முடி வளர, நெய் அல்லது வெண்ணெய் தடவி தங்களை அழகுபடுத்திக் கொள்வார்களாம்.
நோ போட்டோ: அதுமட்டுமலல, எத்தியோப்பியா, சோமாலியாவிலுள்ள பழங்குடியினரில் பெண்கள் போட்டோ எடுத்துக்கொள்வதற்கு அனுமதி கிடையாதாம்.. ஏனென்றால், போட்டோ எடுத்துக் கொண்டால், அந்த பெண்கள் ரத்தக்குறைபாடு பிரச்சனைக்கு ஆளாகிவிடுவார்கள் என்று அழுத்தமாக நம்புகிறார்கள்.

Related Post