நாட்டின் கோடிக்கணக்கான மக்களை தினம்தோறும் சுமந்து செல்லும் உலகின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பு இந்திய ரயில்வே. நாட்டின் மூளை முடுக்கெங்கும் பல்வேறு ரயில்களில் முன்பதிவு கட்டணம், முன்பதிவு இல்லா நேரடி டிக்கெட் என்ற இரு முறைகளில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இதில் தொலைதூர விரைவு ரயில் பயணங்களுக்கு முன்பதிவு கட்டணம் அவசியமாகிறது. அதேவேளை, மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் இல்லாத காரணத்தால் முன்னணி வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
எனவே, பலரும் தட்கல் முறையில் டிக்கெட் பெறலாம் என்று பார்த்தால் அதிலும் மிக சொற்பமான அளவில் தான் கன்ராப்ம் டிக்கெட் கிடைக்கிறது. ஒரு சில வழித்தடங்களில் ரயில் முன்பதிவு டிக்கெட் பெற மிகவும் சிரமப்படுபவர்கள் ஒரு எளிமையான டிரிக்கை பயன்படுத்தி அதன் மூலம் கன்பார்ம் டிக்கெட்டை பெறலாம்.
நீங்கள் வழித்தடம் A இல் இருந்து Bக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு கன்பார்ம் டிக்கெட் விற்று தீர்த்து விட்டன. அப்படி இருக்க நீங்கள் செல்ல இருக்கும் B அடுத்து உள்ள சில ஸ்டேஷன்கள் வரை உள்ள டிக்கெட் நிலவரத்தை பாருங்கள். அல்லது Aக்கு முந்தைய சில ஸ்டேஷனில் இருந்து நீங்கள் செல்லும் இடத்திற்கு டிக்கெட் தேடி பாருங்கள். அங்கு உங்களுக்கு அதிக டிக்கெட் காலியாக இருக்காலம்.
நீங்கள் பயணத்தை தொடங்கும் ஸ்டேஷனுக்கு முன்னதாகவோ அல்லது இறங்கப்போகும் ஸ்டேஷனை தாண்டியோ அதற்கும் சேர்த்து உங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிந்தால் அந்த டிக்கெட்டை வைத்து நீங்கள் பயணம் செய்லாம். கூடுதல் தொலைவுக்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த நேர்ந்தாலும் இது பெரும்பாலும் தட்கல் கட்டணத்தை விட குறைவாகவே இருக்கும்.
உதாரணமாக திருச்சியில் இருந்து விருதாச்சலம் செல்ல விரும்பினால் விருதாச்சலத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஸ்டேஷனான விழுப்புரத்திற்கு டிக்கெட் இருக்கிறது என்றால் விழுப்புரம் வரை முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் செலுத்தும் கூடுதல் கட்டணம் தட்கல் கட்டணத்தை விட பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.
முன்னணி வழித்தடங்களில் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் டிக்கெட் கோட்டா அளவு மாறுபடும். எனவே, உங்கள் வழித்தடத்தில் இந்த டிரிக்கை பயன்படுத்தி நீங்கள் உங்கள் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.