ராகு கேது பெயர்ச்சி பலன்.. 18 ஆண்டுகளுக்குப்பின் 6 ராசிக்காரர்கள்!

post-img

மதுரை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரக்கூடியவை. மேஷ ராசியில் இருக்கும் ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு கேது பெயர்ச்சி திருக்கணிதப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 30ஆம் தேதியன்று நிகழப்போகிறது. 18 ஆண்டுகளுக்குப் பின் யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படும் என்று பார்க்கலாம்.


மேஷம்: இது நாள் வரை ஜென்ம ராசியில் இருந்து பல இன்னல்களை கொடுத்து வந்த ராகு பகவான் இனி உங்கள் ராசிக்கு 12 ம் வீட்டிற்கு வருவதால் எல்லா கஷ்டங்களும் விலகும். தன ஸ்தானத்தை குரு பகவான் பார்க்க போவதால் தடை பட்டு வந்த பண வரவு சீராகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஓன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் வீடு கட்டும் முயற்சிகளில் இறங்குவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் நிலவும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 6 ம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் தொழிலில் இருந்து வந்த முடக்க நிலை மாறி அசுர வளர்ச்சி அடையும். சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் கிட்டும். வேலையில் இது நாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வுகள் தேடி வரும். தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள். கணவன் மனைவி உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தவும்.


ரிஷபம்: ராகு பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டிற்கு வருகிறார். பண வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். திடீர் ஜாக்பாட் மூலம் பண வருமானம் வரும். கேது பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற்று தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக செயல்களில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோக அமைப்பு உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் தொடங்க வழி கிடைக்கும்.

 

மிதுனம்: ராகு கேது பெயர்ச்சியால் புதிதாக தொழில் செய்ய காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம் பிறக்கப்போகிறது. வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். பண வரவை அதிகரிப்பார். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இதனால் உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் உங்களின் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும்.


கடகம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். இதனால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பண தட்டுப்பாடுகள் விலகி பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். 9 ஆம் பார்வையாக ராசியை பார்க்க போகும் குரு பகவான் பெரும் அதிர்ஷ்டத்தை அளிக்க போகிறார். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உங்களுடைய ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் 3 ஆம் வீட்டில் வந்து அமர போகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இழந்த செல்வங்களை திரும்ப பெறுவீர்கள். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். சுறுசுறுப்புடன் செயலாற்றி பல வெற்றிகளை பெறுவார்கள். பிள்ளைகளால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு ஏற்படும். மொத்தத்தில் மிக சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள்.


சிம்மம்: ராகு கேது பெயர்ச்சியால் எடுத்த காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். உயரதிகாரியின் ஆதரவினால் பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். நோய்கள் நீங்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் உண்டாகும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களுடைய ராசிக்கு 3 ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் கேது பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்களுடைய ராசிக்கு 2 ஆம் வீட்டிற்கு வப்போகிறார். வீண் வாக்குவதங்களை தவிர்க்கவும். உறவினர்கள் நண்பர்களுக்கு பண விசயங்களில் தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். அளவுடன் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். அளவிற்கு மீறி பேசும் போது பெரும் சிக்கலில் மாட்டும் நிலை உருவாகும்.


கன்னி: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7 ம் வீட்டிற்கு வரப்போகிறார். உடலில் சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும். ஓருவருகொருவர் விட்டு கொடுத்து சென்றால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம். பண விஷயத்தில் சிக்கன போக்கு தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்களுடைய ராசிக்கு 2 ஆம் இடத்தில் இருந்து வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கேது பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ஜென்ம ராசியிலேயே வந்து அமர போகிறார். அற்புதமான கால கட்டமாக அமையப்போகிறது.


துலாம்: ராகு கேது பெயர்ச்சியால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். உங்கள் குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குரு பகவான் பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன உளைச்சல்கள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். சொத்து பிரச்சனைகளில் சுமூக தீர்வு ஏற்படும். உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்து உடல் நிலையில் தொந்தரவு கொடுத்து வரும் கேது பகவான் ஐப்பசி மாதம் முதல் விரைய ஸ்தானமான 12 ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திடீர் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். புதிய தொழில் தொடங்க சரியான தருணம், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.


விருச்சிகம்: ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் பெருகும். செய்வதறியாது இருந்து வந்த மந்த நிலை மாறி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. புது முயர்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கேது பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு வரப்போவதால் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும். வங்கியில் வாங்கிய கடன்களை பைசல் செய்வீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.


தனுசு: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் வீடான சுக ஸ்தானத்திற்கு வந்து அமர போகிறார். பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். எந்த பிரச்னைகளையம் சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் ஐப்பசி மாதம் முதல் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டிற்கு வரப்போவதால் வேலை தொழிலில் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கி அன்பு பாராட்டுவார்கள். வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் தேடி வரும்.


மகரம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் வந்து அமரப்போகிறார். எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். கடன்கள் பைசலாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னை விலகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் . தடைபட்டு வந்த சுபகாரியங்களை இனிதே சிறப்பாக நடந்தேறும். உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்கிறார் கேது. ஐப்பசி மாதம் முதல் கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வேலையில் நிலவி வந்த தேக்க நிலை மாறும். பெண்களின் நட்பு கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் பெருகும்.


கும்பம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். உங்களுக்கு தேவைகேற்ப நல்ல தனவரவு வரும். நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். எட்டாம் வீட்டில் அமரும் கேதுவினால் தொட்டது துலங்கும். போட்டி பொறாமை எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வருமானம் அபரிமிதமாக வரும். நிதானமாக பேசுங்கள். கோபத்தை தவிருங்கள். செலவுகள் அதிகம் வரும் சிக்கனமும் சேமிப்பும் தேவை. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.


மீனம்: ராகு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வரப்போவதால் கஷ்டங்கள் விலகி நற்பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். இனி எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிட்டும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும். கேது பகவான் இனி உங்கள் ராசிக்கு 7 ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும் இதனால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும் யாராவது ஒருவர் விட்டு கொடுத்து போனால் வாழ்க்கை இனிமையாக மாறும்.

 

Related Post