நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஞாபகம் இருக்கா? இவருடைய வாழ்க்கையில் இத்தனை ச

post-img

சென்னை: சாமி திரைப்படத்தின் பெருமாள் பிச்சை என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து தமிழில் பிரபலமானவர்தான் கோட்டா ஸ்ரீனிவாசராவ்.
இவர் அது போல தமிழில் திருப்பாச்சி பரமசிவன் சகுனி குத்து தாண்டவம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் இவர் நிஜ வாழ்க்கையில் தான் தினமும் கண்ணீர் வடித்து வருவதாக உருக்கமாக சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.


ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகரும் பாடகருமான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தெலுங்கில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அதுவும் அதிகமான திரைப்படங்களில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார். அதேபோல தமிழிலும் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார்.


அது மட்டுமல்லாமல் இவர் நடிகராக மட்டுமல்லாம் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரைக்கும் ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழில் முதல்முறையாக மாசி என்ற திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகமாகி பிறகு தாண்டவம் திரைப்படம், மம்பட்டியான் என கிட்டத்தட்ட 30 திரைப்படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார்.
இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போய் தான் ஹரி இவரை சாமி திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவர் பிச்சை பெருமாள் என்ற கேரக்டரில் கதாநாயகனை விடவும் பெஸ்ட் என்று சொல்கிற மாதிரி தான் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருப்பார். இவருடைய வசனங்களும் அதற்கு ஏற்ப முக எக்ஸ்பிரஷனும் தனித்துவமாக இருக்கும். பார்த்ததும் பயமுறுத்துவது போன்று தான் இவருடைய நடிப்பு அந்த திரைப்படத்தில் இருக்கும்.


அதைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளியான கோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அதிகமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் அதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு இவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவி வந்தது. அது குறித்து நான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று சொல்லி இவர் வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.


அதுபோல கோட்டா ஸ்ரீனிவாச ராவுக்கு ருக்மணி என்ற மனைவியும் அவர்களுக்கு பிரசாத் என்ற மகனும் பவானி பல்லவி என்ற மகள்களும் பிறந்திருக்கின்றனர். இதில் பிரசாத் கடந்த 2016 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் இறந்துவிட்டாராம். அது குறித்து பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது கண்ணீரோடு கோட்டா ஸ்ரீனிவாச ராவ் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது.


அதில் அவர் கண்ணீரோடு பேசுகையில், 2016 ஆம் ஆண்டு என்னுடைய மகனுக்கு வெளிநாட்டில் இருந்து பிரத்தியேகமாக ஒரு பைக் ஒன்றை வாங்கி கொடுத்தோம். அதில் அவன் ஹைதராபாத்தில் உலா வந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக லாரி அவன் மீது மோதி இறந்துவிட்டான். அவனுடைய இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நாளும் இதை நினைத்து நான் அழுது கொண்டிருக்கிறேன்.


மோதலும் காதலும் சீரியல் விக்ரமின் மனைவி இந்த பிரபலம் தானா? பலருக்கும் தெரிந்திடாத ரகசியங்கள்
அதனால் என்னால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் ஆறுதல் கூறியிருக்கிறார்கள். அதுபோல அவருடைய மகன் பிரசாத் ஜே.டி சக்கரவர்த்தியின் சித்தம் திரைப்படத்திலும், காயம் 2 திரைப்படத்திலும் தன்னுடைய தந்தையோடு நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Post