பெட்ரூம் வரை வருவீங்களா? போலீசால் கோபமான அல்லு அர்ஜுன்! மனைவிக்கு முத்தமிடும் முன் கூறிய வார்த்தை

post-img
ஹைதராபாத்: ஹைதராபாத் தியேட்டரில் கடந்த 4ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் இறந்தார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனை இன்று வீடு புகுந்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது அல்லு அர்ஜுன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் கைது நடவடிக்கையின்போது ‛பெட்ரூம் வரை வந்ததெல்லாம் அதிகம்' என்று அல்லு அர்ஜுன் போலீசாரிடம் கூறிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி ரூ.1000 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இதனால் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. இதற்கிடையே தான் அல்லு அர்ஜுன் இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதாவது புஷ்பா 2 திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாளான டிசம்பர் 4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். இந்த வேளையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தில்சுக்நகரை சேர்ந்த ரேவதி (வயது 35) என்ற பெண் இறந்தார். அவரது மகன் தேஜா காயமடைந்தார். இறந்த ரேவதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சத்தை நிவாரணமாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். மேலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜுன் வீடியோ வெளியிட்டார். இருப்பினும் கூட ரேவதியின் கணவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் சிக்கடபள்ளி போலீசார் தியேட்டர் உரிமையாளர், மேலாளர், நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தான் அல்லு அர்ஜுன் இன்று கைது செய்யப்பட்டார். அதாவது ஹைதராபாத் அருகே ஜுபிளி ஹில்ஸ் என்ற ஏரியா உள்ளது. இங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் வீடு உள்ளது. அங்கு இன்று காலையில் சென்ற போலீசார் அல்லு அர்ஜுனை கைது செய்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அந்த வீடியோவில் கார் பார்க்கிங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் டீ குடித்து கொண்டிருப்பார். போலீசார் அவரை கைது செய்ய காத்திருக்கும் சூழலில் அவரது மனைவி ஸ்நேகா கண்கலங்குவார். இதையடுத்து அல்லு அர்ஜுன் தனது மனைவியை சமாதானப்படுத்தி கன்னத்தில் முத்தமிட்டு போலீசாருடன் செல்வார். இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அல்லு அர்ஜுனை கைது செய்ய போலீசார் அவரது பெட்ரூம் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அல்லு அர்ஜுன் உறுதி செய்துள்ளார். பார்க்கிங் இடத்தில் தனது மனைவி ஸ்நேகா, தந்தை அல்லு அர்விந்த், சகோதரர் அல்லு சிரிஸ் உள்பட இன்னும் சிலருடன் நடிகர் அல்லு அர்ஜுன் டீ குடித்தபோது போலீசாரை நோக்கி, ‛‛என்னை பிடித்து செல்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இதனை செய்வதற்காக எனது பெட்ரூம் வரை வந்தது எல்லாம் டூ மச்'' எனக்கூறி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அதன்பிறகு தான் அவர் தனது மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டு போலீசாருடன் சென்றுள்ளார். மேலும் அல்லு அர்ஜுனை போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றும் முன்பு அவரது தந்தை அல்லு அரவிந்தும் மகன் அல்லு அர்ஜுனையும் போலீசார் துணைக்காக ஏற்றி உள்ளனர். பின்பக்க இருக்கையில் அல்லு அரவிந்த் ஏறி அமர்ந்தார். இந்த வேளையில் அல்லு அரவிந்தை, அல்லு அர்ஜுன் செல்லும் போலீஸ் வாகனத்தின் முன்பக்கத்தில் அமரும்படி போலீசார் கூறியுள்ளனர். ஆனால் அல்லு அரவிந்த் இதற்கு மறுத்துள்ளார். அதாவது போலீஸ் வாகனத்தில் தந்தை - மகன் செல்வதை பார்க்கும்போது அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து தந்தை அல்லு அரவிந்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக மீடியாக்களில் தவறான செய்திகள் வரலாம் என்று அவர் நினைத்தார். இதுபற்றி அறிந்த போலீஸ்காரர்களும் அல்லு அரவிந்தை போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்க அனுமதித்தனர். அப்போது போலீஸ் வாகனத்தின் கதவு அருகே நின்று தனது தந்தை அல்லு அரவிந்த் இறங்க வழிவிட்ட அல்லு அர்ஜுன், ‛‛நல்லதோ, கெட்டதோ எல்லாம் என்னுடனே போகட்டும்'' என்று கூறி சிரித்தார். இதையடுத்து அல்லு அர்ஜுனை மட்டும் வாகனத்தில் ஏற்றி சிக்கடபள்ளி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Post