மாரிமுத்து வீட்டு கேட்டை எட்டி உதைச்சிட்டு போனாரு.. கடைசியா சொன்னது.. எதிர்நீச்சல் SK

post-img

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவர் காலமாகி ஒரு வாரங்களுக்கு மேலே ஆனாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து அதிகமான ரசிகர்களால் மீள முடியாமல் தான் இருக்கின்றனர்.


இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து பற்றி பிரபலங்கள் பல தகவல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரோடு எதிர்நீச்சல் சீரியலில் எஸ் கே ஆர் ஆக நடிப்பவர் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதற்குக் காரணம் சீரியலின் இயக்குனர் மற்றும் கதை ஆசிரியராக இருந்தாலும் இந்த சீரியலில் முதுகெலும்பாக இருப்பது குணசேகரன் கேரக்டர் தான். அந்த கேரக்டரில் அனைவரையும் மிரளவைத்த நடிகர் மாரிமுத்து மரணத்திற்கு பிறகு சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.


இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து பற்றி பல தகவல்களையும் அவருடைய நினைவுகளையும் அவருடன் நடித்த நடிகர்களும் நண்பர்களும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் எஸ்கேஆர், நடிகர் மாரிமுத்துவோடு பழகிய அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் மாரிமுத்து சாரை ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் முதல்முறையாக அவரை நேரில் பார்த்த பிறகு ரொம்பவே அதிசயப்பட்டு இருக்கிறேன்.

 

அவருடைய தன்னம்பிக்கை தைரியம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எந்த இடத்திலும் தன்னுடைய செயல் நியாயமாக இருப்பதால் அவர் பயப்படவே மாட்டார். அது எனக்கு ரொம்பவே பிடித்தது. அவர் சென்னைக்கு வந்தபோது அவர் ஒரு கடை ஓரத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்ததாம். அப்போது அங்கே பயப்பட்டு இருக்காமல் கடைக்காரரிடம் நான் இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி இந்த வாசலில் படுத்து கொள்கிறேன் என்று தைரியமாக கேட்டு அங்கேயே படுத்து எழுந்து அடுத்த நாள் வாய்ப்புக்காக அலைந்ததாக கூறியிருக்கிறார்.


அப்படி பல போராட்டங்களுக்கு பிறகு தான் அவருக்கு வெற்றி கிடைத்தது. அதே நேரத்தில் சீரியலில் அவரைப் பார்ப்பவர்கள் அவர் நிஜத்தில் இப்படித்தான் இருப்பாரோ என்று நினைத்து இருப்பார்கள். ஆனால் அவர் அப்படி எல்லாம் கிடையாது. அதேபோல அவருடைய நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் சில எபிசோடுகளுக்கு முன்பு என்னுடைய வீட்டிற்கு வந்து இருப்பார். வந்து என்னிடம் பேசிவிட்டு வெளியே போகும்போது வீட்டு கேட்டை காலால் எட்டி மிதித்து விட்டு இவன்கிட்ட எல்லாம் வந்து பேச வேண்டிய நிலைமை இருக்கு என்று புலம்பி விட்டுப் போவார் அதை பார்த்து நான் சிரித்தே விட்டேன்.


ஏனென்றால் அவர் அப்படிப்பட்டவரே கிடையாது. அதுபோல நடிப்பு என்றால் அதில் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருமுறை நான் சூட்டிங் கிளம்பிக்கொண்டிருக்கும்போது பனியனை மாற்றி போட்டு விட்டேன் உடனே அதை கவனித்த மாரிமுத்து சார், என்ன சார் இப்படி பனியனை மாற்றி போட்டு இருக்கீங்க. நீங்க ஒரு நடிகர் அதை மனதில் வைத்து சரியாக உடை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று எனக்கு கடைசியாக அட்வைஸ் கொடுத்தார். அது என்னால் மறக்க முடியாது என்று எஸ்.கே.ஆர் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

 

Related Post