இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருதே.. மேலும் 16 தமிழக மீனவர்களை நடுக்கடலில் கைது செய்தது!

post-img
சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்தது. தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்த போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழக மீனவர்கள் 16 பேரையும் அவர்களது 2 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை. தற்போது கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Related Post