இண்டிகோ நிறுவனம் 17 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சூப்பர் ஆஃபர்களை அறிவித்துள்ளன. இந்த சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். முன்னணி விமான நிறுவனமாகத் தொடரும் இண்டிகோ கண்ணைக் கவரும் சலுகைகளைக் கொண்டு வந்துள்ளது. விமான டிக்கெட்டுகளை பெரும் தள்ளுபடியுடன் வழங்குகிறது. விமான டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் இந்த சலுகைகளை பெறலாம்.
இண்டிகோ நிறுவனம் தனது 17வது ஆண்டு விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி சலுகைகளை கொண்டு வந்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 4 வரை மட்டுமே நீடிக்கும். அதாவது நீங்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.
அதே போல ஆகஸ்ட் 4 ஆம் தேதி முன்பதிவு செய்யும் விமான டிக்கெட்டுகளுக்கு 7 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இண்டிகோ நிறுவனம் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் எச்எஸ்பிசி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த தள்ளுபடிகளை வழங்குகிறது. .
மேலும் நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் உங்களுக்கு ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களுக்கு விருப்பமான இருக்கையை வெறும் ரூ.17 செலுத்தி தேர்வு செய்யலாம் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
எனவே நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், இந்தச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வரும் வாரங்களில் மேலும் பல புதிய சேவைகள் கிடைக்கும் என்றும், நைரோபி, ஜகார்த்தா, திபிலிசி, பாகு போன்ற பிற இடங்களுக்கும் விமான சேவைகள் கிடைக்கும் என்றும் இண்டிகோ நிறுவனத்தின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இன்னும் ஒரு நாள் மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும் என்பதால் தள்ளுபடி பெற உடனடியாக IndiGo இணையதளம் அல்லது ஆப் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் நீங்கள் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.