சென்னை: மார்கழி மாதம் இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் எந்தெந்த ராசிகளுக்கு எல்லாம் பணம் கொட்டும் என்று இங்கே பலன்களை பார்க்கலாம்.
மிதுன ராசி: மிதுன ராசியினருக்கு இந்த மார்கழி மாதம் வரன் கைகூடும். படைப்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை தரும். சில சிறிய உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம், எனவே உங்கள் உணவு மற்றும் வழக்கத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மாதத்தின் நடுப்பகுதியில் குடும்பத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் தீரும். பணம் கைகூடும் வாய்ப்புகள் வரும்.
கடக ராசி: நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும்.. புதிய புதிய இடங்களில் இருந்து பணம் வரும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் செலவுகள் உயரக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் மோதல்களைத் தவிர்க்க உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆனால் மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
சிம்ம ராசி: தொழில் வளர்ச்சி மற்றும் அங்கீகாரம் பெற இது ஒரு நல்ல மாதம். ஆனால் அவசரப்பட்டு நிதி தொடர்பான முதலீட்டு முடிவுகளைத் தவிர்க்கவும். உறவுகள் இடையே மோதல் ஏற்படலாம். பங்கு சந்தையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கலாம், எனவே பொறுமையாக இருக்கவும். கணவன் மனைவி மோதல் வரலாம். அதனால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும். பணம் போட்ட இடங்களில் இருந்து நல்ல ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்.
விருச்சிக ராசி : உங்களுக்கு இந்த மாதம் பிஸ்னஸ் மாதம். இந்த மாதம் வீடு வாங்குவீர்கள். நிலம் வாங்குவீர்கள். பணம் கொட்டும். இந்த மாதம் பிஸ்னஸ் தொடங்குவீர்கள். முக்கியமாக புதிய வர்த்தகம் செய்வீர்கள். நினைத்ததெல்லாம் நடக்கும் காலம் இது. பிரச்சனை இல்லாமல் எல்லாம் செல்லும். எந்த பெரிய சவாலும் இல்லாமல் பிரச்சனைகள் சரியாகும். வேலை மாற வேண்டிய சூழல் ஏற்படலாம். சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். . பொருளாதார ரீதியாக உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் தீரும். பணம் கைகூடும் வாய்ப்புகள் வரும்.
மகர ராசி: உங்கள் தொழிலில் அல்லது வேளையில் நீங்கள் சிறிது சிக்கிக்கொண்டதாக உணரலாம், ஆனால் அது தற்காலிகமானது. புதிய திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சினைகள். குடும்ப வாழ்க்கை இணக்கமாக இருக்கும். தனிப்பட்ட வளர்ச்சி உங்கள் வாழ்வில் இருக்கும். முக்கியமான பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பொற்காலம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது.
மீன ராசி: வேலையில் சில தாமதங்கள் ஏற்படலாம். பொறுமையாக இருங்கள். நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். அன்புக்குரியவர்கள் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவார்கள். உங்கள் வாழ்க்கையில் இத்தனை காலம் கடன்தான் பெரிய பிரச்சனையாக இருந்தது. அது இப்போது சரியாகும். உங்கள் வங்கி கணக்கில் பணம் புரளும் காலம் இது. பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் கிடைக்கும் . நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும்.. புதிய புதிய இடங்களில் இருந்து பணம் வரும் வாய்ப்புகள் உள்ளன.