யாருடைய வன்மம் இது? ஒரு டெஸ்ட் லெஜெண்டுக்கு முறையாக ஃபேர்வெல் கூட தராத ரோஹித் - கம்பீர்! கொடுமை

post-img
சென்னை: இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு இந்த தொடரில் ஆட வாய்ப்பே வழங்காமல்.. அதிலும் முறையாக ஃபேர்வெல் கூட தராமல் போனது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் நாட்டின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின் டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.. 38 வயதான அஸ்வின், பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவுக்காக 13 ஆண்டுகாலமாக கிரிக்கெட் ஆடிய நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார். 537 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் டாப் ஸ்பின் பவுலர்களில் ஒருவராக அஸ்வின் உள்ளார். அனில் கும்ப்ளேவின் 619 ரன்களுக்கு அடுத்தபடியாக அஸ்வின் உள்ளார். இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பிரிஸ்பேன் ஆட்டம் டிரா ஆன பின் அஸ்வின் இந்த முடிவை அறிவித்தார். இன்று ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் (வி.கே.), ரோஹித் சர்மா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் ஆடினார். அஸ்வினுக்கு இந்த தொடரில் ஆட வாய்ப்பே வழங்காமல்.. அதிலும் முறையாக ஃபேர்வெல் கூட தராமல் போனது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இன்று ஆட்டத்திற்கு பின் அஸ்வினை கோலி கட்டிபிடித்தார். அதை தாண்டி அஸ்வினுக்கு பெரிய ஃபேர்வெல் வழங்கப்படவில்லை. ஒரு காலத்தில் நெஹ்ராவிற்கு தோனி சிறப்பாக ஃபேர்வெல் கொடுத்தார். பார்ம் இழந்தவரை சிஎஸ்கேவில் எடுத்து பார்மிற்கு கொண்டு வந்து.. அவரை இந்திய அணியில் எடுத்து நல்ல சிறப்பான கடைசி மேட்ச் ஃபேர்வெல் கொடுத்தார். ஆனால் பார்மில் இருக்கும்.. அணியில் இருக்கும் ஒருவருக்கு.. அஸ்வின் போன்ற தலைசிறந்த வீரருக்கு ரோஹித் - கம்பீர் அணியால் ஃபேர்வெல் தர முடியவில்லை. சாதனைகள்: டெஸ்ட் கிரிக்கெட்டில் (போட்டிகளின் அடிப்படையில்) 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வேகமாக எட்டியவர் அஸ்வின். 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை (போட்டிகளின் அடிப்படையில்) எட்டிய அதிவேக இந்தியர். ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மற்றும் ஐந்து விக்கெட்டுகளை நான்கு முறை எடுத்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 50 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். டெஸ்ட்களில் அதிக நாயகன் விருதுகள் (11) பெற்றவர். டெஸ்டில் இரண்டாவது அதிக ஐந்து விக்கெட்டுகள் (37) மற்றும் வேகமாக 25 ஐந்து விக்கெட்டுகள் எடுத்தவர் அஸ்வின். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் (522). ஒரு காலண்டர் ஆண்டில் (2016) 500 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்தியர்[199] ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்தவர் (82) ஆவார்.

Related Post