சத்தீஸ்கரில் நான் தவறு செய்துவிட்டேன்.. அப்படி சொல்லியிருக்க கூடாது! முன்னாள் அமைச்சர'

post-img

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு சாதகமாக தேர்தல் களம் இருப்பதாக நான் கூறியது தவறு என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அதில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட 4 மாநிலங்களில் தெலுங்கானாவில் கே சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அது போல் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி இருந்தது. இந்த நிலையில் தற்போது 4 மாநில தேர்தல்களில் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
மற்ற 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெல்லவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் சத்தீஸ்கரில் பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் அங்கு அக்கட்சி தோல்வியையே சந்தித்தது.

Congratulations to the Congress party and its workers in Telangana for pulling off a credible victory in the face of a fierce contest with BRS and BJP. 
I was wrong in calling the election in Chhattisgarh in favour of the Congress. My ground reports were wrong.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சத்தீஸ்கரில் பாஜக 51 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 26 இடங்களில் வென்றுள்ளது.
அது போல் பூபேஷ் பாகல் வெற்றி பெற்றுள்ளார். அது போல் துணை முதல்வராக இருந்த டி.எஸ். சிங் தேவ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறியிருப்பதாவது: தெலுங்கானாவில் பிஆர்எஸ், பாஜகவுடன் கடுமையாக போராடி வென்ற காங்கிரஸுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


சத்தீஸ்கரில் தேர்தல் களநிலவரம் காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது என கூறியது தவறு. என்னுடைய கள நிலவரம் தவறு என தெரிவித்துள்ளார். ப சிதம்பரம் கடந்த அக்டோபர் ராய்ப்பூர் காங்கிரஸ் அலுவலகத்தில் பேசுகையில் புலிகள், யானைகள் எல்லாம் எண்ணப்படும் போது ஜாதி வாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தக் கூடாது, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை கணக்கெடுக்கவும் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவைப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

 

Related Post