மகளிர் உரிமைத்தொகை.. இனி ரூ.1000 அல்ல.. உயர்த்தப்படப்போகும் தொகை? திமுக மாஸ்டர்பிளான்!

post-img
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால் அரசு தரப்பில் இந்த தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மகளிர் உரிமை தொகை திட்டம் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்களில் எல்லாம் 1500 ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு முன்னோடி தமிழக அரசுதான். ஆனால் தமிழ்நாட்டில் ரூ.1000 தான் வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் வழங்கப்படும் தொகை அடுத்த வருடம் பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் 2026ல் நடத்தப்படும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து.. எதிர்க்கட்சிகள் வழங்க போகு ம் வாக்குத்திகளை மனதில் வைத்து ஆளும் திமுக அரசு தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் விரிவாக்கம்; மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதை பற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள் ஆகியோர்களுக்கு எல்லாம் இந்த திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏற்கனவே பென்ஷன் பெறக்கூடிய பெண்கள், அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதற்கான அறிவிப்புகள் வரலாம் என்றுகூறப்படுகிறது . வேறு சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,. மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் விளக்கம்: ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும் என்று விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 'மகளிர் உரிமைத்தொகை' என பேசியதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் உரிமை தொகை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக செய்ய வாய்ப்பு இல்லை என்பதால் தேர்தல் முடிந்த பின் தமிழ்நாட்டில் விரைவில் மகளிர் உரிமை தொகை திட்டம் மீண்டும் விரிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் விரிவாக்கத்திற்கு பின்பும் நீங்கள் அதில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன. மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விபத்துப்பம் செய்யலாம். இப்போது செய்ய முடியாது என்றாலும் அடுத்த சில வாரங்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019ல் 27 மாவட்டங்களில் நடந்த தேர்தல் நடந்தது. தேர்வான நபர்களின் பதவி காலம் வரும் டிசம்பருடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல்: 2026 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது அதே சமயம் இன்னொரு பக்கம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது தொடர்பாக திமுக அரசு இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் தேதியை பொறுத்து தமிழ்நாட்டில் விரைவில் மகளிர் உரிமை தொகை திட்டம் மீண்டும் விரிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post