பி.வி. சிந்துவின் கணவர் யார்? அவர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

post-img
சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதும் அவர் திருமணம் செய்துள்ள தொழிலதிபரின் சொத்து எவ்வளவு என்பது பற்றியும் தகவல் தெரியவந்துள்ளது. பேட்மிண்டன் உலகில் ஒரு தேவதையை போல வலம்வந்தவர் பி.வி.சிந்து. இந்தியாவின் சார்பில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இறகுப்பந்து வீராங்கனையான இவர் பாரிஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். இவருக்கும் தொழிலதிபர் வெங்கட தத்தா சாய்க்கும் கடந்த 22 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவரது கணவர் மிகப் பெரிய தொழிலதிபர் குடும்ப பின்னணியைக் கொண்டவர். சாயுடனான சிந்துவின் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் நேற்று இந்த இளம் தம்பதியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் அஜீத்குமார் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார். கருப்பு நிற கோட் ஷூட் அணிந்திருந்த அஜித், உடல் எடை குறைந்து இளமையாகக் காணப்பட்டர். அவர் அதிகம் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் இல்லை. சிந்து விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் என்பதால் அஜித் ஆர்வத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்று தம்பதியை வாழ்த்தி இருக்கிறார். இது தொடர்பான அஜித் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக நேற்றுமுதல் பரவி வருகிறது. தனது மணவாழ்க்கை பற்றி பேசிய சிந்து, “என் திருமணம் என் வாழ்க்கையில் நிலைத்தன்மையைக் குறிக்கிறது. நான் சிறப்பாகச் செயல்பட அந்த நிலைத்தன்மை உதவும்” என கூறியுள்ளார். மேலும், “பாதுகாப்பு உணர்வும் ஆதரவும் மிகவும் முக்கியமானது. நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். வாழ்வில் இந்தப் புதிய கட்டம் மிகச் சிறப்பு அமைந்துள்ளதாக உணர்கிறேன்” என்றும் கூறி இருக்கிறார். இந்நிலையில் மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவரை சிந்து திருமணம் செய்து கொண்டுள்ளதால், அவரது சொத்து மதிப்பு பற்றிய பேச்சுகள் ஊடகங்களில் அடிபட ஆரம்பித்துள்ளது. ஜீ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி சிந்துவின் சொத்து மதிப்பு 7.1 மில்லியன் டாலர் எனத் தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.59 கோடி ஆகும். இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவராக சிந்து இருந்துவருகிறார். இதில் அவரது பேட்மிண்டன் வெற்றி மூலம் கிடைத்த தொகை மற்றும் அவர் விளம்பரங்கள் மூலம் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஆகியவை அடங்கும். இவருக்கு ஹைதராபாத்தில் ஒரு ஆடம்பரமான வீடு உள்ளது. விளையாட்டுத் துறை போக அவர் ரியல் எஸ்டேட்டில் குறிப்பிடத்தக்க முதலீட்டுக்களை செய்திருக்கிறார். அவர் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் நிரூபித்ததற்காக அவருக்கு BMW X5 காரை பரிசாக கிடைத்தது. இது தவிர மேலும் சில கார்களை சிந்து வைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீன பிராண்டான லி நிங்குடன் ரூ. 50 கோடி ஒப்பந்தத்தில் சிந்து கையெழுத்திட்டுள்ளார். அவர் மேபெல்லைன், பாங்க் ஆஃப் பரோடா, ஆசிய பெயிண்ட்ஸ் என பல பிராண்டுகளின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் மூலம் அவருக்கு ஒரு வருமானம் கிடைக்கிறது. இவரை இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதில் இவர் செய்யும் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுகிறார். சிந்துவுடன் ஒப்பிடுகையில் அவரது கணவர் வெங்கட தத்தா சாயின் பெரிய பணக்காரர். அவர் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸில் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.150 கோடி. இவர் தொழிலதிபராக இருந்தாலும் விளையாட்டுத்துறை மீது அதிக ஆர்வம் கொண்டவர். ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் செயல்பாட்டுத் தலைவராகப் பணியாற்றி இருக்கிறார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post