அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஹைகோர்ட்

post-img
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே சு சுரேன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதிமுகவில் பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்ததை எதிர்த்தும், தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரியும் அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே சு சுரேன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தனர் இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர். மேலும் விளம்பரத்துக்காக போட்டப்பட்ட வழக்கு என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Post