இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாமல் இருப்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதிலும் குறிப்பாக யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மிகவும் பிரபலமாக உள்ளது. இதுபோன்ற சமூக வலைதளத்தில் லட்சகணக்கானோர் கணக்கை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கேபியோஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது உலக அளவில் மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த்தாக யூடியூப், whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் அடுத்தடுத்த இடங்களையும், டிக் டாக் செயலி யாராவது இடத்தையும், பேஸ்புக் மெசஞ்சர் ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.