பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி அம்மாவிடம் கோபி பாக்யா மற்றும் பழனிச்சாமியை பற்றி தவறாக பேசியிருக்கிறார்.
இதனால் பழனிச்சாமியின் அம்மா பாக்யாவுக்கும் பழனிசாமிக்கும் திருமணம் செய்து வைக்கலாமா என்று கேட்க பழனிச்சாமி கோபப்படுகிறார்.
இந்த நிலையில் இனியா பாக்கியாவின் நடவடிக்கையை பார்த்து கோபப்படுகிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கான எபிசோடில் ஆரம்பத்தில் பழனிசாமியின் அம்மா பழனிசாமி இடம் கோபி வந்து பேசியதை சொல்ல அதற்கு பழனிச்சாமி எல்லார்கிட்டயும் சொல்லிப் பார்த்தார். சரிவரல என்றதும் உங்ககிட்டயும் சொல்ல வந்து விட்டாரா என்று கேட்கிறார்.
அதற்கு பழனிச்சாமியின் அம்மா உனக்கு பாக்யாவை பிடிச்சிருக்கு தானே, பாக்யாவை நீ கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல, அதற்கு பழனிசாமி என் மனதிலும் ஒன்றுமில்லை. அவங்க மனசுலையும் ஒன்றுமில்லை. தவறாக நீங்க ஏதாவது நினைச்சுக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார்.
வீட்டில் பாக்கியா சந்தோஷமாக இருப்பதை பார்த்த ராமமூர்த்தி இப்பதான் அம்மா நீ சந்தோசமா இருப்பதை பார்க்க எனக்கு சந்தோசமா இருக்கு என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா காலேஜுக்கு போய் தேவையான பொருட்களை வாங்கணும் என்று இனியாவையும் கூப்பிட அதற்கு இனியா நான் வரவில்லை. எனக்கு டாடி எல்லாம் வாங்கி தருவதாக சொன்னாரு என்று சொல்ல, எழில் நீ அவர் என்ன பண்ணினாலும் அவரை விட்றதா இல்லையா என்று திட்டுகிறார்.
அதே நேரத்தில் கோபி வீட்டில் தனியாக புலம்பி கொண்டிருக்க அப்போது ராதிகா என்ன என்று கேட்க ஆபிஸில் சரியான வேலை, அங்கே இங்கே ஓடிட்டு இருந்தேன். அந்த இடியட் வேற தலைக்கு மேல இருந்து ஆடிட்டு இருக்கிறா என்று சொல்ல, கோபமான ராதிகா நீங்க பாக்யாவ தானே சொல்றீங்க என்று கேட்க அதற்கு கோபி தட் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போனதை பற்றி உளறி விடுகிறார். ஒவ்வொரு முறையும் நீங்க அவங்க கிட்ட போய் அவமானப்பட்டுட்டு இருக்கிறீர்களா? என்று திட்டி சண்டை இடுகிறார்.
அதைத் தொடர்ந்து ஷாப்பிங் போயிட்டு வந்த இனியாவும் பாக்கியாவும் தாங்கள் வாங்கிய பொருள்களில் யாருடைய பொருள் அழகாக இருக்கிறது என்று ஒருவர் கூறுவர் பேசிக் கொண்டிருக்க, அதை பார்த்து எல்லோரும் சிரிக்கின்றனர். அடுத்த நாள் காலையில் விடிந்ததும் இனியா காலேஜுக்கு கிளம்பியதும் பாக்யா பூஜை செய்து முடிக்கிறார். அனைவரும் இனியாவிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து இனியாவை யார் காலேஜில் கொண்டு விடுவது என்று அவர்களுக்குள்ளே சண்டை வருகிறது. பாக்யா நான் ஆட்டோவில் வருகிறேன் என்று சொல்ல, எழில் நான் கூட்டிட்டு போகிறேன் என்று சொல்ல, செழியன் நான் கூட்டிட்டு போகிறேன் என்று சொல்ல, இனியா சந்தோஷத்தோடு வெளியே வர அங்கே கோபி காத்திருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.