பழைய ரூ.5 நாணயங்களை ரத்து செய்ய போகும் ஆர்பிஐ? இனி கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டில் இருந்து நீக்கம்?

post-img
சென்னை: பழைய ரூ.5 நாணயங்களை ரத்து செய்ய ஆர்பிஐ ஆலோசனை செய்து வருகிறதாம். தற்போது பயன்பாட்டில் உள்ள தடிமனான 5 ரூபாய் நாணயங்கள் வெகுவாக மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதை இனி கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டில் இருந்து நீக்க ஆர்பிஐ ஆலோசனை செய்து வருகிறதாம். ஆனால் பணமதிப்பிழப்பு போல உடனடியாக ஒரே முடிவில் மதிப்பு நீக்கப்படாது. இதற்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது... சரியாக சொல்ல வேண்டுமானால் நீங்கள் எதிர்பார்க்காத காரணம் ஒன்று உள்ளது. இந்தியாவில் 5 ரூபாய் நாணயங்களின் புழக்கம் சமீபத்தில்தான் மாற்றப்பட்டது, புதிய மெல்லிய நாணயங்கள் பழக்கத்திற்கு வந்துள்ளன. பழைய தடிமனான மற்றும் கனமான நாணயங்களுக்குப் பதிலாக மாற்றப்பட்டுள்ளன. இனி கொஞ்சம் கொஞ்சமாக பழைய தடிமனான மற்றும் கனமான நாணயங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும். பழைய நாணய உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. அந்த நாணயத்தின் சந்தை மதிப்பு மற்றும் உலோக மதிப்பு இடையே உள்ள வேறுபாடு காரணமாக இந்த விலை கூடி உள்ளது. இந்த நாணயங்களின் சந்தை மதிப்பும் அவற்றின் உலோக மதிப்பும் கணிசமாக வேறுபடுகின்றன. அதாவது ஒரு நாணயத்தை உருவாக ஆகும் செலவு.. அதன் உண்மையான மதிப்பை விட குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள விலைவாசியில் 5 ரூபாய் நாணயத்தின் உற்பத்தி செலவு அதன் மதிப்பை விட கூடுதலாக உள்ளது. நாணயங்களின் உலோக உள்ளடக்கம் ரூ. 5 ஐ விட அதிகம் மதிப்புமிக்கது. இதைப் பயன்படுத்தி மக்கள் சிலர் இந்த நாணயங்களை துஷ்பிரயோகம் செய்தனர். அதாவது நாணயத்தை உருக்கி.. அந்த உலோகத்தை விற்று கூடுதல் பணம் பெறுகிறார்கள். மேலும் இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சிலர் இந்த உலோகத்தை பயன்படுத்தி கத்தி போன்ற பொருட்களை தயாரித்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாகவே பழைய ரூ.5 நாணயங்களை ரத்து செய்ய ஆர்பிஐ ஆலோசனை செய்து வருகிறதாம். இதை இனி கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டில் இருந்து நீக்க ஆர்பிஐ ஆலோசனை செய்து வருகிறதாம். இதற்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது ரிசர்வ் வங்கி நடவடிக்கை: இந்திய ரிசர்வ் வங்கி இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பழைய நாணயங்களில் இருந்தது போல இல்லாமல் புதிய நாணயத்தில் விலை குறைந்த உலோகத்தை பயன்படுத்துவதற்கான முடிவை எடுத்துள்ளது. அவற்றிலிருந்து கத்திகள் தயாரிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் வகையில், புதிய ரூ.5 நாணயங்கள் இப்போது மெல்லியதாகவும், இலகுவாகவும், வேறுபட்ட உலோகத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. இது தவிர, இந்த நாணயங்களின் பொருள் மற்றும் வடிவமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அதில் கூடுதல் வசதிகள் சேர்த்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் விஷமிகள் சிலர் இந்த உலோகத்தை பயன்படுத்தி கத்தி போன்ற பொருட்களை இனி தயாரிக்க முடியாது. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நாணயங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க.. பழைய ரூ.5 நாணயங்களை ரத்து செய்ய ஆர்பிஐ ஆலோசனை செய்து வருகிறதாம். தற்போது பயன்பாட்டில் உள்ள தடிமனான 5 ரூபாய் நாணயங்கள் வெகுவாக மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதை இனி கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாட்டில் இருந்து நீக்க ஆர்பிஐ ஆலோசனை செய்து வருகிறதாம். கடந்த சில மாதங்களாக, கனமான மற்றும் தடிமனான பழைய ரூபாய் 5 நாணயங்கள் படிப்படியாக புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. இது இப்போது மற்ற வகை மெல்லிய நாணயங்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கி உள்ளது. பழைய நாணயங்கள் இனி அரசு அல்லது இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) உற்பத்தி செய்யப்படுவதில்லை; இப்போது புதிய நாணயங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்று ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Post