செந்தில் பாலாஜி கைது- முதல்வர் துடிதுடித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

post-img

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவு 2 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி, கதறி அழுதார். இதையடுத்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பட்டினம்பாக்கம் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப செந்தில்பாலாஜி கைது உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை ஊரார் கைதட்டி வரவேற்கின்றனர். பல ஊழல்கள் நடந்துள்ளது 20ஆயிரம் கோடிக்கு மேல் செந்தில் பாலாஜி கொள்ளையடித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மதுவிற்கப்பட்டது. இப்போது 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது. அரசின் வரிவருவாயை சட்ட விரோத பார்கள் மூலம் அரசுக்கு வருவாயை அமைச்சர் செந்தில்பாலாஜி தடுத்துள்ளார். அந்த வருவாய் ஒரு குடும்பத்திற்கு சென்றுள்ளது. 2ஆண்டுகளில் பார்கள் மூலம் ஒன்றரை சதவிகிதம் வரைவு காசோலை மூலம் அரசுக்கு வரும் அதை செந்தில்பாலாஜி தனக்கு வரும்படி செய்துள்ளார்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல் உள்ளார். ஸ்டாலின் துடிதுடித்து போயியுள்ளார். ஸ்டாலின் குறித்த அனைத்து விவரங்களும் செந்தில்பாலாஜிக்கு தெரியும் என்பதால் முதல்வர் பயந்து போயியுள்ளார்.” என்றார்.

Related Post