வீடியோ- நடு வழியில் நின்று கொண்டிருந்த தோனிக்கு உதவிய இளைஞர்கள்..

post-img

நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது திடீரென்று ஒரு கார் வருகிறது. அதில் தோனி உங்களிடம் உதவி கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்.

அதுதான் தற்போது நடந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனி தற்போது தனது காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு தற்போது தோனி ஓய்வில் இருக்கிறார். தனது வீட்டில் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்து வரும் தோனி அவ்வப்போது நண்பருடன் வெளியே செல்கிறார். இந்த நிலையில் தோனியிடம் மிக ஸ்பெஷலான கார் வகைகள் எல்லாம் இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு ராஞ்சியில் தோனி பேரரசன் போல் வலம் வருகிறார்.

இந்த நிலையில் தோனி ராஞ்சியில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று சில இளைஞர்களை நிறுத்தி இந்த வழி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர்கள் தோனிக்கு இந்த இடத்திற்கு இப்படித்தான் செல்ல வேண்டும் என வழி சொல்கிறார்கள். இதனையடுத்து அந்த இளைஞர்களுக்கு கை கொடுத்த தோனி அவர்களுடன் காரில் இருந்தபடியே போட்டோ எடுத்துக் கொண்டார்.

பின்பு அங்கிருந்து தோனி சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் தோனி எவ்வளவு சாதாரணமாக நடந்து கொள்கிறார் பாருங்கள் என்று பாராட்டி வருகின்றனர். மேலும் சிலர் கூகுள் மேப் போன்ற பல தொழில்நுட்பங்கள் வந்துள்ள நிலையில் தோனி இன்னும் பழைய காலத்தில் இருப்பது போல் அங்கு இருக்கும் நபர்களிடம் அட்ரஸை கேட்டு செல்கிறார் என்று பாராட்டி வருகின்றனர்.

தோனி நினைத்திருந்தால் தான் பிரபலம் எப்படி சாலையில் நடந்து கொண்டு செல்பவர்களிடம் பேசுவது என நினைத்திருக்கலாம். ஆனால் அவர் எல்லாரையும் போல் சாதாரணமாக மற்றவரிடம் உதவி கேட்டு சென்றது. இந்த வீடியோவை பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தோனி இவ்வளவு சிம்பிள் சிட்டியாக இருக்கக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Related Post