மும்பை: மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலில் மும்பை மாநகராட்சியில் மட்டும் தனித்துப் போட்டியிட உத்தவ் தாக்கரே சிவசேனா முயற்சித்து வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் புனே, நாசிக் உள்ளிட்ட மாநகராட்சிகளில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் உத்தவ் தாக்கரே சிவசேனா விரும்புவதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.