சென்னை: பாஜக கூட்டணியை அதிமுக முறித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பாஜகவை எதிர்க்கும் பட்சத்தில் அண்ணாமலை தனது அதிரடியை காட்டுவார். அண்ணாமலை திருப்பி அடிப்பார், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிட்டாலும் அது பற்றி எடப்பாடி பழனிசாமி எதுவும் நேரடியாக இதுவரை பேசவில்லை. ஒருவார்த்தை கூட கூட்டணி முறிவை பற்றி பேசவில்லை.ஒருவேளை அவர் பாஜகவை எதிர்த்து பேசினால் அவருக்கு எதிராக அண்ணாமலை களமிறங்குவார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், பாஜக கூட்டணியை உடைத்தால் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் வாக்களிப்பார்கள் என்று எடப்பாடி நினைக்கிறார். முஸ்லீம், கிறிஸ்துவர்கள் முட்டாள்களா? முஸ்லீம், கிறிஸ்துவர்கள் விவகாரத்தில் எடப்பாடி எங்குமே நிற்கவில்லை. யாருக்குமே ஆதரவாக நிற்கவில்லை. எடப்பாடி என்ஐஏ விவகாரம் தொடங்கி எதிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் உடன் ஆலோசனை செய்யவில்லை. முஸ்லீம், கிறிஸ்துவர்கள் இதை எல்லாம் நம்புவார்களா சரி இருக்கட்டும் இப்போதும் கூட எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை எதிர்க்கவில்லையே. தேசிய பாஜகவை அண்ணாமலையை எதிர்ப்பது போல.. எடப்பாடி எதிர்பாரா? டெல்லியை எடப்பாடி பழனிசாமி எதிர்பாரா?
இதெல்லாம் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் பார்க்க மாட்டார்களா? அண்ணாமலையை திட்டுவது போல எடப்பாடி டெல்லி பாஜகவை திட்டுவாரா? அப்படியே திட்டினாலும் அண்ணாமலை விட மாட்டார். எடப்பாடி டெல்லியை எதிர்த்தார் என்றால் அண்ணாமலை பிச்சு உதறுவார், பட்டாசு வெடிக்கும். அண்ணாமலை பிச்சு எடுக்க போகிறார். அண்ணாமலையா எடப்பாடி பழனிசாமியா என்று பார்க்கலாம். அண்ணாமலை அளவிற்கு இடப்படிக்கு இறங்கி வந்துவிட்டார். யார் பெரியவர் என்று மோதி பார்க்கலாம்.
யார் பெரிய ஆள் என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் நிரூபிக்கட்டும். பாராளுமன்றத்தில் ஏன் தமிழ் இல்லை என்று புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி கேட்பாரா? அவரால் கேட்க முடியுமா? அவர்தான் பாஜகவை எதிர்க்கிறார் என்கிறீர்களே இதை எதிர்க்க அவரால் முடியுமா? மோடி, அமித் ஷாவை எடப்பாடியால் எதிர்க்க முடியுமா? எடப்பாடி மெகா கூட்டணி அமைக்க முடியும் என்கிறார். அவரால் முடியுமா? யார் அவருக்கு கீழ்வருவார்கள் ? அவரை நம்பி யாரும் வர மாட்டார்கள்?
எடப்பாடியை நம்ப மாட்டார்கள். முக்கியமாக திமுக கூட்டணியை விட்டு யாரும் வர மாட்டார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். எடப்பாடியை நம்பி திமுக கூட்டணி கட்சிகள் வர முடியாது. அவருக்கு 15 சதவிகித வாக்குகள் மட்டுமே உள்ளது. அவரை ஏற்றுக்கொண்டு யார் வருவார்கள். எடப்பாடி பெரிய ஆள் ஆக வேண்டும். எடப்பாடி தன்னை நிரூபிக்க வேண்டும். எடப்பாடி தனக்கு ஆதரவு இருக்கிறது. தனக்கு பலம் இருக்கிறது என்பதை நிரூபித்தால் மட்டுமே அவரால் கூட்டணியை உருவாக்க முடியும்.
அதுவரை அவரால் மெகா கூட்டணி எல்லாம் அமைக்க முடியாது. அது எல்லாம் கனவாகவே இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். விசிக திமுக கூட்டணியில்தான் இருக்கும். கம்யூனிஸ்டு கட்சிகள் திமுக கூட்டணியில்தான் இருப்பார்கள். காங்கிரஸ் திமுக கூட்டணியில்தான் இருப்பார்கள். நாம் தமிழர் சீமான் கூட தனியாகவே இருப்பார். கமல் ஹாசன் கூட திமுக உடன் இணைய போகிறார். திமுகவுடன் இணைய பாமக தூது விட்டுக்கொண்டு இருக்கிறது. அப்படி இருக்க எடப்பாடி உடன் யார் கூட்டணி வைப்பார்கள்.
அவர் இப்படி போனால் தனித்து விடப்படுவார். மோடி, அமித் ஷாவை எடப்பாடி எதிர்க்க மாட்டார். அப்படி இருக்க அவர்களை எதிர்க்காமல் எடப்பாடி தேர்தலில் மக்களிடம் கவனம் பெறுவார். தமிழ்நாட்டில் மோடி பெயரை சொல்லி அல்லது மோடியை எதிர்த்து அரசியல் செய்யலாம். இது இரண்டு செய்யாமல் எடப்பாடி எப்படி லோக்சபா தேர்தலில் வாக்கு வங்கி பெறுவார் என்று பார்க்கலாம், என்று ரவீந்திரன் துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.