ஈசிஆர் பண்ணையில் "கைமாறிய" மனைவிகள்.. கோவை சரவணம்பட்டி காதல் ஜோடி.. 2024ஐ உலுக்கிய கலாச்சார சீரழிவு

post-img
கோவை: கொலை, கொள்ளைகளை போலவே, வரம்பு மீறும் உறவுகளின் அட்டூழியங்களும் பெருகிவிட்டன. காதலிகளை மாற்றி கொள்வது, மனைவிகளை மாற்றிக் கொள்வது என உறவுகளை கொச்சைப்படுத்தும் அசிங்கமான சம்பவங்கள் பல, இந்த வருடம் நம்முடைய நாட்டில் நடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன. அதில் ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம். சென்னையில் 2 வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் ரோட்டில் இந்த சம்பவம் நடந்தது.. அதாவது, பணக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து, தங்களது மனைவிகளை மாற்றி கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஈசிஆர் ரோட்டில் உள்ள ஸ்டார் ஹோட்டல், ரிசார்ட்டுகளில், இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன. பணக்காரர்கள்: அதாவது, பணக்காரர்கள் தங்கள் மனைவியுடன் ஜோடியாக இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். அனைவரது கைகளிலும், அவர்களது கார் சாவிகள் இருக்கும்.. எல்லாரும் சேர்ந்து அந்த சாவியை குலுக்கலில் போடுவார்கள்.. யார் கையில், எந்த வீட்டு கார் சாவி கிடைக்கிறதோ, அந்த சாவிக்குரிய மனைவியை மாற்றி கொள்வார்கள். "மீவீ" என்ற ஆப் மூலம்தான் இந்த விளையாட்டு ஃபேஸ்புக்கில் அப்போது நடந்தது.. குலுக்கல் முறையில் மனைவியை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, அவர்களுடன் அன்றைய இரவு முழுவதும் ஜாலியாக இருப்பார்கள்.. விருப்பம் இருந்தால், அதை போட்டோ, வீடியோவும் எடுத்து அவர்களுக்குள் ஷேர் செய்து கொள்ளலாம். சென்னை, பெங்களுரூ போன்ற முக்கிய நகரங்களில் பணக்காரர்களில் சிலர், இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள கொள்வதற்காகவே திரண்டு வருவார்களாம். ஜோடிகள்: ஜோடிகளை மாற்றி விளையாடும் இந்த ஆபத்தான, அசிங்கமான விளையாட்டை பற்றி கேள்விப்பட்டதுமே தமிழக மக்கள் இடிந்து போய்விட்டார்கள். பிறகு இது தொடர்பாக பலரையும் போலீசார் கைது செய்திருந்தனர். இதுசம்பந்தமாக போலீசார் நடவடிக்கை அப்போதே எடுத்திருந்தனர். ஆனால், இந்த வருட தொடக்கத்தில் இதே சம்பவம் இதே ஈசிஆர், பனையூரில் நடந்தது.. அங்குள்ள பண்ணை வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளது ஒரு இளம்ஜோடி.. பிறந்த நாள், திருமண நாள் என்ற பெயரில் இந்த பண்ணை வீட்டில் பார்ட்டி வைப்பார்கள். இந்த பார்ட்டியிலும் ஜோடிகளை மாற்றி அனுபவிப்பார்கள்.. சரவணம்பட்டி: அடுத்த சில மாதங்களில் கோவை சரவணம்பட்டியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. சரவணம்பட்டியில் செயல்படும் பிரபலமான "கபே" ஒன்றில் டீ, காபி, கேக், ஜூஸ் விற்கப்பட்டு வருகின்றன.. ஜூஸ் கடை போல தெரிந்தாலும், அதனுள் ரிசார்ட் செட்டப்பில் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் நேரத்தில் டேட்டிங் பார்ட்டி இங்கு நடக்கும். அப்படித்தான் கடந்த புத்தாண்டின்போதும், இந்த ஜூஸ் கடையில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டது. "சிங்கிளா வந்தால் ஜோடி ரெடி.. ஜோடியாக வந்தால், ஜாலி டேட்டிங்" என்ற விளம்பரம் வெளியானது, இதில், சிங்களா வருபவர்களுடன் , இளம்பெண்கள் ஜோடி சேரலாம்.. கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம், சின்னவேடம்பட்டி என பல்வேறு பகுதியில், ஏராளமான ஐடி இளைஞர்கள், வேலை பார்த்து வருவதால், இவர்களை குறி வைத்தே இப்படியொரு விளம்பரம் செய்யப்பட்டது. விசாரணை: இதனால் ஆவேசப்பட்ட அந்த பகுதி மக்கள், நேரடியாக கமிஷனர் ஆபீசுக்கே சென்று புகார் தந்தனர். இதற்கு பிறகு சரவணம்பட்டி போலீசார் "டேட்டிங் கபே" தொடர்பான விசாரணையில் இறங்கியபோது, இதற்கெல்லாம் காரணம் ஒரு பெண் என்பது தெரியவந்தது. கேரளாவிலும் இப்படித்தான், ஒரு வாட்ஸ்அப் குரூப்பில், மனைவிகளை மாற்றிக் கொள்ளும் விநோதம் நடந்தது.. கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர் 1000 தம்பதிகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.. திருமணமாகாதவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இப்படி கல்யாணம் ஆகாதவர்கள், மாற்றான் மனைவியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படும். இதில் சிக்கிய ஒரு பரிதாப பெண், தன்னுடைய கணவர் மீது போலீசில் புகாரளித்தபோதுதான், இந்த சம்பவம் வெளி உலகத்துக்கு தெரியவந்தது. பெங்களூர்: 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் ஒரு அசிங்கம் நடந்துள்ளது.. காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க முயன்ற 2 இளைஞர்களம் முடிவு செய்து, இதை பற்றி சம்பந்தப்பட்ட பெண்களிடமும் சொல்லிஉள்ளனர்.. அந்த பெண்கள் இதைக்கேட்டு கொந்தளித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு சென்று புகார் தந்துவிட்டனர். இதையடுத்து 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களது செல்போன்களும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போதுதான், இவர்கள் 2 பேரும் பல பெண்களை ஏமாற்றி மாறிமாறி உல்லாசம் அனுபவித்ததும், அது தொடர்பான வீடியோக்களை செல்போனில் பத்திரப்படுத்தி வைத்துள்ளதையும் கண்டு போலீசார் அதிர்ந்தனர். கலாச்சார சீரழிவு: அன்று வெளிநாடுகளில் தொடங்கி, இந்தியாவுக்குள் நுழைந்து, தென்மாநிலங்களிலும் ஊடுருவி இன்று கோவை, சென்னை என நம்முடைய ஊர்களிலும் இந்த கலாச்சார சீரழிவு வேர்விட துவங்கியிருக்கிறது. பொதுமக்களை அதிரவைத்த இதுபோன்ற சீர்கெட்ட கலாச்சாரங்களை ஆரம்பத்திலேயே வெட்டி சாய்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

Related Post